துணை நடிகை பலாத்கார புகார்! முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

0
73

துணை நடிகை சாந்தினி அவர்கள் முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அந்த புகார் மனுவில் மலேசியாவைச் சார்ந்த தான் சென்னையில் இருக்கக்கூடிய மலேசிய நாட்டின் துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றி வந்தேன் என குறிப்பிட்டு இருந்தார். அந்த சமயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பணி ஆற்றி வந்த மணிகண்டன் உடன் நட்பு ஏற்பட்டது எனவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார் எனவும், அவர் தெரிவித்திருக்கிறா.ர் ஐந்து வருடகாலமாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார் எனவும், அவருடன் இருந்த காலகட்டத்தில் நான் மூன்று முறை கருவுற்றேன் வலுக்கட்டாயமாக அதனை கலைக்க செய்தார் எனவும், தற்சமயம் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து மிரட்டல் விடுக்கிறார் எனவும், ஆகவே அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், புகார் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் காவல் துறையினர் 351 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள். அதோடு இந்த வழக்கில் மணிகண்டன் மீது 342, 352 உள்ளிட்ட இரண்டு பிரிவுகளையும், கூடுதலாக சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே திமுக அரசு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்ற சூழ்நிலையில், தற்சமயம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிமுகவிற்கு ஒரு மாபெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

அதோடு அதிமுக மீது பொதுமக்கள் இடையே இருக்கும் நற்பெயரை கெடுக்கும் விதத்தில் திமுக செயல்பட்டு வருவதாக அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் ஒருவர் பெண்கள் விவகாரத்தில் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது வெளியே தெரியவந்தால் அது அதிமுகவுக்கு மேலும் கலங்கத்தை விளைவிக்கும் என்று வருத்தத்தில் இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.