ஏன் இந்த அவசரம்? திமுக அரசை விமர்சனம் செய்த ஓபிஎஸ்!

0
55

அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் இதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மதுரையில் நேற்றைய தினம் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் ஒரு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அதாவது திமுக அரசு மிகவும் அவசரத்தில் இருக்கிறது எதிர்க்கட்சிகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து வருகிறது, அதோடு எதிர்க்கட்சிகளை அழித்துவிட வேண்டும் என எண்ணம் கொண்டிருக்கிறது அது நடக்காது. அரசியல் நாகரிகத்துடன் உரையாற்ற வேண்டும், நடந்துகொள்ளவேண்டும், என்பது எங்களுடைய நிலைப்பாடு என கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் திமுகவின் அத்துமீறிய செயல்கள் காரணமாக, அதிமுகவின் வெற்றிகள் பல்வேறு பகுதிகளில் மறைக்கப்பட்டு இருக்கின்றன. இது குறித்து ஆளுநரிடம் புகார் மனு வழங்கப்பட்டது. இது தொடர்பாக மிக விரைவில் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி இருக்கிறார் பன்னீர்செல்வம்.

திமுக அரசுக்கு அதிமுக 6 மாத கால அவகாசம் கொடுத்து இருந்தது இனிமேலும் அதிமுக அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்தும் விதத்தில் திமுக செயல்பட்டால் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அதிமுக ஆட்சி காலத்தின் போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக இருந்தது. மாநிலம் அமைதிப் பூங்காவாக காணப்பட்டது, திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் பின்னடைவு உண்டாகியிருக்கிறது. மீண்டும் அதிமுக அரசு சரி செய்தது, அதிமுக ஆட்சி காலத்தில் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் இதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என தெரிவித்திருக்கிறார்.

பெட்ரோல், டீசல், விலை உயர்வு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பொறுப்பு இருக்கிறது இரண்டு அரசுகளும் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற சிரமங்களை குறைப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்திருக்கிறது இதன் காரணமாக, பொதுமக்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகி இருக்கிறது. அதனை சரி செய்ய இரண்டு அரசுகளும் போதுமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.