சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் கிடைத்த பதவி!

0
65

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கரூர் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே அதிமுக ஆட்சிக் காலத்தில் 25.3கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது.

முறையான திட்டமிடல் இன்றி அது கட்டப்பட்ட சூழ்நிலையில், ஜனவரி மாதம் அதன் ஒரு பகுதியை உடைந்தது பணியை முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் தெரிவித்து சென்னை மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர் சுமதி, உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தடுப்பு அணியின் இன்னொரு பகுதி அண்மையில் பெய்த மழையின் காரணமாக, சேதமடைந்தது. இதில் இருந்து வெளியேறிய நீரின் காரணமாக, சுற்றுப் பகுதி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு நடுவில் தடுப்பு அணை விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை பொறியாளர் அசோகன் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது தரமணியில் உள்ள நீர் ஆய்வு நிறுவன தரக்கட்டுப்பாடு பிரிவு தலைமை பொறியாளராக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு இவர்தான் சான்றிதழ் வழங்க வேண்டுமாம், இந்த விவகாரத்தில் சிக்கிய ஒரு அதிகாரிக்கு அது தொடர்பான பதவி கிடைத்து இருக்கிறது இது போன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மற்ற அதிகாரிகளும் மறுபடியும் ஒரு பெற்று இருக்கிறார்கள். அதேபோல தடுப்பணை கட்டுமான பணியை மேற்கொண்ட பிஎஸ்டி ஒப்பந்த நிறுவனம் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.