தீவிரமடையும் பருவமழை! இந்த 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

0
104

தமிழ்நாடு முழுவதும் கடந்த 29ஆம் தேதி வடகிழக்க பருவமழை ஆரம்பமானது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது.

அதோடு மேலும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட இலங்கை கடற்கரையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து இருப்பதாலும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி ஆரம்பமானது வடகிழக்க பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நேற்று முதல் கனமழை நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கியும், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கியும் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.