இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி!

0
105

இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி!

மதுரை: பயணிகளின் சேவையை மேம்படுத்த ரயில்வே துறைக்கு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.என்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்பநாபன் அனந்த் கூறினார். மேலும், மதுரை- தேனி வழித்தடத்தில் ரயிலை இயக்குவது சவாலாக உள்ளது என்றும் அவர் விவரித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”இந்திய ரயில்வேயில் ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கும் திறனை கண்காணிப்பது, புறநகர் ரயில் போக்குவரத்தில் விபத்தின்றி அதிக ரயில்களை இயக்குவது, துல்லியமாக ரயில் பாதையை ஆய்வு செய்வதற்கு தொழில்நுட்பம், அதிக எடையைத் தாங்கும் சரக்கு ரயில் பெட்டிகளுக்கு நெகிழ்வு அடுக்கு, ரயில் மின் பாதைகளை கண்காணிப்பது, எடை குறைவான ரயில் சரக்கு பெட்டிகள் தயாரிப்பது, ரயில் பாதை சரளைக் கற்களை சுத்தப்படுத்தும் இயந்திரம், ஊழியர்களுக்கான முன் பயிற்சி மற்றும் தன்னிலை அலுவல்கால பயிற்சி, ரயில் பாலங்களை ஆய்வு செய்ய தற்கால புதிய தொழில் நுட்பம், பயணிகள் சேவையை மேம்படுத்த மின்னணு தரவுகளை பகுப்பாயும் தொழில் நுட்பம் போன்ற ரயில்வே துறைக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க புதிய ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வாய்ப்பு தரப்பட உள்ளது.