பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

0
33

 

பாடம் நடத்தும் பள்ளியில் புடவை விற்பனை… ஜவுளிக்கடையாக மாறி பள்ளியை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி…

 

பாடம் நடத்தும் பள்ளியில் ஒன்றில் புடவை விற்பனை நடந்து வருவது தொடர்பாக இணையத்தில் வெளியான வீடியோ வைரலானது. இதையடுத்து இந்த வீடியைவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் அதிக மாணவர்கள் இந்த அரசு பள்ளிக்கு வந்து கல்வி கற்கின்றனர்.

 

இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலை நேரத்தில் மதிய வேலையில் புடவை வியாபாரி ஒருவர் ஆசிரியர்களுக்கு புடவை விற்பனை செய்தார். இதையடுத்து பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பாக புகார் அளித்தனர். பிள்ளைகளை பள்ளிக்கு பாடம் படிக்க அனுப்பினால் அங்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்காமல் புடவை வாங்கிக் கொண்டிருந்தது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து புகார் எழுந்ததை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி அவர்கள் “வியாபாரி ஒருவர் பள்ளியில் புடவை வியாபாரம் செய்வதற்கு அனுமதி கேட்டார். பள்ளி வேலை நேரம் முடிந்த பின்னர் மாணவர்கள் வெளியே வந்த பின்னர் புடவை வியாபாரம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மதிய வேலையில் வந்து ஆசிரியர்களுக்கு புடவையை காண்பித்துள்ளார். பள்ளி வேலை நேரத்தில் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.