ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!!

0
242
#image_title

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!!

தற்பொழுது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை ஆனது அதிக அளவில் காணப்படுகிறது. காய்கறி கடை முதல் சிறு பெட்டி கடை என அனைத்து இடங்களிலும் ஸ்கேனிங் வசதி உள்ளது.

அந்த வகையில் கிட்டத்தட்ட 1409 லட்சம் கோடி பரிமாற்றம் ஆனது இந்தியாவில் நடைபெற்றுள்ளது. எந்த அளவிற்கு இதன் உபயோகத்தன்மை உள்ளதோ அந்த அளவிற்கு இதில் மோசடியும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

எனவே இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் அவ்வபோது எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் எப்படி ஏடிஎம்களில் ஒரு நாளில் இவ்வளவு தான் தொகை எடுக்க முடியும் என்பதை நிர்ணயம் செய்துள்ளார்களோ, அதே போல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் இனி குறிப்பிட்ட தொகையை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக என் பி சி ஏ என்ற விதிமுறைப்படி ஒரு நாளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரையான பணம் பரிமாற்றத்தை செய்து கொள்ள முடியும். இருந்தபோதிலும் அது வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

அந்த வகையில் கனரா வங்கியில் ஒரு நாளில் 25 ஆயிரம் வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

ஸ்டேட் பேங்க் வங்கியில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை செய்து கொள்ளலாம்.

இதே போல எச்டிஎப்சி, ஐசிஐசி, ஆக்சிஸ் போன்ற வங்கிகளிலும் ஒரு லட்சம் வரை பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

அதிலும் எச்டிஎப்சி வங்கியில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும், மற்றவர்களுக்கு 50000 வரை மட்டுமே நிர்ணயம் செய்துள்ளனர்.

தொகையில் மட்டுமின்றி ஒரு நாளில் இத்தனை முறைதான் பரிமாற்றம் செய்ய முடியும் என்ற புதிய விதிமுறையையும் அமல்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இனிவரும் நாட்களில் ஒரு நாளில் 20 முறை மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும். இதற்கு மாறாக கூடுதலாக செய்ய நினைத்தால் கூட பண பரிமாற்றம் செய்ய இயலாது.

இந்த இருபது முறை என்பதும் வங்கிகள் மூலம் செலுத்தும் யு பி ஐ முறையை பயன்படுத்துவதால் மட்டுமே சாத்தியம். இதுவே ஜி பே போன் பே போன்ற முறைகளில் பணப்பரிமாற்றம் செய்ய நினைத்தால் ஒரு நாளில் பத்து முறை மட்டும் தான் மேற்கொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே இதற்கு லிமிட் கொடுத்துள்ளனர். மற்ற செயலிகளில் நாம் ஒரு லட்சம் ரூபாய் க்குள் எதிரில் இருப்பவருக்கு ரெக்வெஸ்ட் அனுப்ப முடியும். ஆனால் கூகுள் பேவில் 2000 ரூபாய் வரை மட்டுமே ரெக்வெஸ்ட் கொடுக்க முடியும்.

அதிகப்படியான ஆன்லைன் பண பரிமாற்றம் செய்யப்படுவதால் அதிகளவில் மோசடி புகார்கள் ஏற்படுகிறது. அதனை தடுக்கவே இவ்வாறான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.