திமுக போலவே வாரிசு அரசியலை பின்பற்றும் கேரள காங்கிரஸ்!!

0
36

 

 

திமுக போலவே வாரிசு அரசியலை பின்பற்றும் கேரள காங்கிரஸ்!!

 

 

மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த அதே தொகுதியில் அவரது மகன் போட்டியிடுவதாக கேரள மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

 

 

இந்திய தேர்தல் ஆணையம் மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கான சட்டசபை இடைத்தேர்தல் தேதியை அறிவிதுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறும், இடைத்தேர்தலுக்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

 

 

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்கள் தான் போட்டியிட்ட 12 தேர்தலிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை அப்படித்துள்ளார். 2்முறை முதல்வராகவும், நான்கு முறை அமைச்சராகவும் பதவி வகித்த உம்மன் சாண்டி அவர்கள் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதான அடையாள நட்சத்திரமாக திகழ்ந்தார். அவர. மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளது.

 

 

இருப்பினும் மக்கள் மத்தியில், அவருக்கு பெரும் செல்வாக்கு என்றும் நிலைத்து நிற்கிறது. இதனை தங்கள் கட்சிக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள கேரள காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. இந்நிலையில் கடந்த வாரம் உம்மன் சாண்டி அவர்கள் இயற்கை எய்தினார். புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உம்மன் சாண்டி அவர்கள் மறைந்ததை அடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் புதுப்பள்ளி உள்ளிட்ட 7 மாநிலங்களிலும் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

 

உடனே, கேரள மாநில காங்கிரஸ் கட்சி மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புதுப்பள்ளி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது மகன் சாண்டி உம்மன் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து, அதற்குரிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

 

 

அதற்குப் போட்டியாக கேரள மாநில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த வாரத்திற்குள் போட்டியாளரே அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் தான் இந்த இடைத்தேர்தலில் கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

 

இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

 

 

author avatar
Parthipan K