ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா?

0
74
Sir tell us the way! Will this voice fall on Stalin's ears?
Sir tell us the way! Will this voice fall on Stalin's ears?

ஐயா எங்களுக்கு வழி சொல்லுங்க! இக்குரல் ஸ்டாலின் காதில் விழுமா?

சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடைபெற்றது.இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலானது பெரும் பரபரப்பாகவே இருந்தது.இரு கட்சியினரிடமும் பெரும் போட்டி நிலவியது.அதுமட்டுமின்றி இரு கட்சிகளும் தன்னுடன் இதர கட்சிகளையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.அதனையடுத்து வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும் போதெல்லாம் திக் திக் நிமிடங்களாகவே தமிழ்நாட்டிற்கு இருந்தது.ஆட்சியை கைப்பற்றுவதற்காக மக்களிடம் பலவகை அறிக்கைகளை இரு கட்சியினரும் வெளியிட்டிருந்தனர்.

எந்த கட்சி வந்தாலும் கூறிய அறிக்கைகளை அனைத்தும் செயலில் வருமா என்ற கேள்வியும் மக்கள் மனதில் இருந்தது.திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 159 இடங்களை வென்றது.அதே அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 75 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.அதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மே மாதம் பதவியேற்றார்.அவர் பதவி ஏற்றதும் முக்கிய ஐந்து நலத்திட்டங்களில் கையெழுத்திட்டார்.அதில் ஒன்று தான் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கட்டணமில்லா பேருந்து பயணம்.

இந்த அறிவிப்பு வெளியான முதல் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.மகளிருக்கு நல்ல பயனளிக்க கூடியது என்றாலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பெரும் சிக்கலாகவே அமைந்துள்ளது.இதனிடையே கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவீரம் காட்டியதால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.இந்த ஊரடங்கில் அதிகளவு பாதித்தது,தொலை தொடர் பயணம் முகவர்களின் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டது.அந்தவகையில் ஓர் ஆட்டோ ஓட்டுனர் ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கோரிக்கை கூறியுள்ளார்.

அந்த ஆட்டோ ஓட்டுனர் கூறியதாவது,ஐயா முதலமைச்சர் ஐயா,வணக்கம்.ஆட்டோ ஓட்டுனர் சார்பில் நான் பேசுகிறேன்.எங்களுக்கு ஆட்டோவிற்கு எந்த சவாரியும் வருவதில்லை.நீங்கள் பேருந்துககளில் பெண்கள் செல்ல இலவசம் என்ற கூறியது நல்ல காரியம் தான்,ஆனால் எங்களது தொழில் மிகவும் முடங்கிவிட்டது.எங்களுக்கு வாழ்வாதாரத்தை நடத்தவே போதுமான வருமானம் வருவது இல்லை.முன்பு எல்லாம் அம்மா வாங்க பாத்து ரூபாய் தான் உங்கள் இடத்தில் இறக்கி விடுகிறேன் என்று ஷேர் ஆட்டோ பயணம் நடத்தி வந்தோம்.தற்போது நீங்கள் இலவச பேருந்து வசதியை அமல்படுத்தியதும் எங்களுக்கு சவாரி குறைந்துவிட்டது.நீங்கள் தான் இதற்கு நல்ல வழி காட்ட வேண்டும் என்று அந்த ஆட்டோ ஓட்டுனர் இருக்கரங்களையும் கூப்பி கேட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இக்குரலுக்கு பதில் அளிப்பார என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.