சத்துணவு கூடத்தில் எலும்புக்கூடு-அதிர்ச்சியில் அதிகாரிகள்!

0
90
Elephant skeletal

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை பணிக்காக அதிகாரிகள் அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் எலும்புகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தேர்தல் மையத்தை தேர்வு செய்யும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த பணியின் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பள்ளியை வால்பாறை பேரூராட்சி தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த பணியின் போது பள்ளிக்கூடத்திற்கு அருகே இருக்கும் சத்துணவு கூடத்தை அதிகாரிகள் திறந்து பார்த்த போது . அங்கு, உடல் சிதைந்த நிலையில் குட்டி யானையின் எலும்புக்கூடு கிடந்ததைக் கண்டு தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த பள்ளிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையின் சிதைந்த உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேதபரிசோதனைக்கு பின் குட்டியானையின் உடல் எரியூட்டப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் , தேவையான மாணவர் சேர்க்கை இல்லாததாலும், ஊரடங்கினாலும் இந்த பள்ளி நீண்டநாட்களாக பூட்டப்பட்டிருந்தது. சத்துணவு கூடத்தின் பின்புற சுவற்றில் ஓட்டை இருந்துள்ளது.

அந்த ஓட்டை வழியே சத்துணவு கூடத்தில் இருக்கும் அரிசி மற்றும் தானியங்களை சாப்பிட குட்டியானை உள்ளே வந்திருக்க கூடும் எனவும், பின்னர் வெளியே செல்ல வழி தெரியாமல் அங்கேயே அந்த குட்டியானை உயிரிழந்திருக்கலாம். மேலும் குட்டியானை இறந்து சில மாதங்கள் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவிலேயே யானையின் உயிரிழப்பு குறித்து உண்மையான தகவல் வெளியே வரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K