நான்காவது முறையாக 300+ ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா!!! குயின்டன் டிகாக் அபார ஆட்டம்!!!

0
32
#image_title

நான்காவது முறையாக 300+ ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா!!! குயின்டன் டிகாக் அபார ஆட்டம்!!!

இன்று(அக்டோபர்24) நடைபெற்று வரும் வங்கதேசம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி நான்காவது முறையாக 300க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளது. மேலும் குயின்டன் டிகாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்24) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் 23வது லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகின்றது.

முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 12 ரன்களிலும், வான் டெர் டுசென் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டிகாக் அவர்கள் அபாரமாக விளையாட தொடங்கினார். அவருடன் இணைந்த எய்டன் மார்க்ரம் சிறப்பாக விளையாடத் தொடங்கினார்.

மார்க்கம் அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய குயின்டன் டிகாக் சதமடித்தார். அதன் பிறகு களமிறங்கிய கிளாசன் வங்கதேச பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை சிக்சர்களுக்கு விரட்டினார்.

அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த தொடக்க வீரர் குயின்டன் டிகாக் 174 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கிளாசன் 49 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 15 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.

வங்கதேச அணியில் பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாகிப் அல் ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், மெகிடி ஹசன் மிராஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து வங்கதேச அணிக்கு 383 ரன்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.