மீண்டும் தென் ஆப்பிரிக்காவை பழிவாங்கிய மழை…. நூலிழையில் தவறிய வெற்றி வாய்ப்பு!

0
116

மீண்டும் தென் ஆப்பிரிக்காவை பழிவாங்கிய மழை…. நூலிழையில் தவறிய வெற்றி வாய்ப்பு!

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக்கில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றியின் அருகே நின்ற தென்னாப்பிரிக்கா மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ளது.

மழையால் இந்த போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 78 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை விளாசியது. இன்னும் சில ஓவர்களில் வெற்றியை பெற்றுவிடும் என நினைத்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.

அதன் பின்னர் ஆட்டத்தை தொடர முடியவில்லை. டக்வொர்த் லூயிஸ் விதியைக் கொண்டு வெற்றி தோல்வியை திர்மானிக்க இன்னும் சில ஓவர்களாவது வீசப்பட்டு இருக்க வேண்டும் என்ற நிலையில் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வெற்றியின் விளிம்பில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியும் அந்நாட்டு ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா அணி மழையால் உலகக்கோப்பையில் பாதிக்கப்படுவது இது முதல் முறை இல்லை. 96 உலகக்க்கோப்பையில் கூட இதுபோல மழையால் பாதிக்கப்பட்ட ஒரு போட்டியில் கோப்ப்பையை வெல்லும் வாய்ப்பு இழந்தது என்பது குறிப்பிடத் தக்கது.