புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி!

0
173
#image_title
புதிய நாடாளுமன்ற திறப்பு விழா! எதிர்கட்சிகள் புறக்கணிக்க கூடாது… நிர்மலா சீதாராமன் பேட்டி!
மே 28ம் தேதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் கூறியுள்ளார்.
டெல்லியில் வரும் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கபடவுள்ளது. இந்த செங்கோல் இந்தியா சுதந்திரம் அடைந்ததை நினைவுகூறும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு வழங்கப்பட்டதாகும். இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கணிப்பது பற்றி மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் பேசினார்.
அப்போது அந்த கூட்டத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை புறக்கணிக்கும் திட்டத்தை எதிர்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “மக்களவை சபாநாயகர் எதிர்கட்சிகளுக்கு முறையாக அழைப்பு விடுத்தார். எதிர்கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜனாதிபதி திரௌபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். உங்களை நம்பி இருக்கும் மக்களுக்காகவாவது புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு எதிர்கட்சிகள் வர வேண்டும்” என்று கூறினார்.