டிடிவி தினகரன் ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்கள்! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிமுக தலைமை!

0
78

அதிமுகவிற்கு எதிராக பேசிவந்த டிடிவிக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு அறந்தாங்கி ரத்தினசபாபதி விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவிக்கு ஆதரவாக இருந்தாலும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதோடு அவர்கள் தரப்பு வாதங்களையும் மற்றும் விளக்கங்களையும் சபாநாயகருக்கு அளித்தார்கள். இதன் காரணமாக அவர்கள் பதவி பறிப்பில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள். இந்த சூழ்நிலையில், எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழ ஆரம்பித்தது.

இருந்தாலும் டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட போவதில்லை என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்ததால் கள்ளக்குறிச்சி சட்டசபை உறுப்பினர் பிரபு, அறந்தாங்கி சட்டசபை உறுப்பினர் ரத்தின சபாபதி, விருதாச்சலம் சட்டசபை உறுப்பினர் கலைச்செல்வன், ஆகியோருக்கு எதிர் வரும் சட்டசபை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் கட்சியில் இருந்து ஒதுங்கி தன்னுடைய சொந்த வேலையை பார்த்துக் கொண்டிருந்த அதிமுகவின் வேட்பாளர்கள் நேர்காணலில் இடம்பெறாத சென்னை முன்னாள் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அவர்களுக்கு சைதாப்பேட்டையில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

டிடிவி தினகரனையும் சசிகலாவையும் மொத்தமாக ஓரம் கட்ட வேண்டுமென்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மன எண்ணமாக இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இந்த எம்எல்ஏகளையும் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மற்ற நிர்வாகிகளையும் அதிரடியாக நீக்கம் செய்தது வருகிறது அதிமுக தலைமை.ஆக மொத்தத்தில் இந்தத் தேர்தலில் எப்படியேனும் சசிகலாவையும் தினகரனையும் ஓரங்கட்டி விட வேண்டும் என்று நினைக்கிறது அதிமுக தலைமை. அதேசமயத்தில் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் அதிமுக நிலைக்கும் என்றும் சொல்கிறார்கள்.