ஸ்டாலினின் குரல்வளையை பிடித்த சைதை துரைசாமி! அதிர்ச்சியில் திமுக முக்கிய நிர்வாகிகள்!

0
104

சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அப்போது சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் அதிமுகவை சார்ந்த சைதை துரைசாமி.ஸ்டாலின் அந்தத் தேர்தலில் 2 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார். ஆனால் அந்த வெற்றி ஸ்டாலினின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அடைந்த வெற்றி என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவருடைய வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவை சேர்ந்த சைதை துரைசாமி வழக்கு தொடுத்தார். சுமார் ஆறு வருட காலம் நடைபெற்ற அந்த வழக்கில் 2017 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கிற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் அறிவித்த அதே சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதே கொளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த சூழ்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தயிரில் சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் அப்படியே இருந்தபடியால் சென்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவே இதனை பாரதிய ஜனதா கட்சியை தெரிந்துகொண்டு ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை துரிதப்படுத்துமாறு ஒரு மூன்றாவது நபரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. சம்மந்தப்பட்டவர் தானே வழக்கு தொடர வேண்டும் என்ற கேள்வி அப்போது எழுந்தது. அதன் அடிப்படையில்தான் தற்சமயம் நேற்றையதினம் மென்ஷனிங் அப்ளிகேஷன் என்ற விதத்தில் சைதை துரைசாமி தரப்பில் ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தேவையான முகாந்திரம் இருப்பதாக சுட்டிக் காட்டி வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் இந்த வழக்கை மிக விரைவாக விசாரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக திமுகவின் வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது திமுக அடுத்து ஆட்சிக்கு வரப்போவது உறுதி என்பதை தெளிவாக தெரிந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற விதத்தில் பல அவசர வேலைகளை செய்து வருகிறது. எந்த வகையிலாவது ஒரு சட்ட தடையை ஏற்படுத்திவிட இயலுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கை பொறுத்த வரையில் பத்திரிகையாளர்களுக்கு செய்தி மட்டுமே ஒழிய வேறு எந்த விதமான சட்ட ரீதியான முக்கியத்துவமும் இந்த வழக்கிற்கு இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.