முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த குடியரசு தலைவர்!

0
68

தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஒரு கோரிக்கையை நீண்ட காலமாகவே மத்திய மாநில அரசுகளுக்கு வைத்திருந்தார்கள். அதனை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுடன் பல முறை மனுக்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் எந்தவித பலனையும் அடைய முடியவில்லை.அதாவது குடும்பர், காலாடி, பண்ணாடி, வாதிரி உப்பரிகையில் இருந்து வரும் மக்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைப்பதற்கான வழி செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தார்கள்.

அதேபோல தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியலினத்தை விட்டு பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக வைத்து வருகிறார்கள்.ஆனால் தற்சமயம் அவர்கள் வைத்த இரண்டு கோரிக்கையில் ஒரு கோரிக்கையை மட்டும் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றியிருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் இருக்கின்ற பள்ளர், கடையர், காலாடி, பண்ணாடி, வாதிரி குடும்பர் உள்ளிட்ட வகுப்பினைச் சார்ந்தவர்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு வைத்த கோரிக்கையை தற்சமயம் இரு அரசுகளுமே நிறைவேற்றியிருக்கிறது.

அவர்களுடைய இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரிடம் வலியுறுத்தியது, அதனை அடுத்து தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் திடீரென சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த சட்ட மசோதா ஒப்புதல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அதாவது தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா நிறைவேற்றப் படாமல் இருந்தது. வாக்குப்பதிவு தற்சமயம் முடிந்து விட்டபடியால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து அது சட்டமாகி இருக்கிறது.