உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இன்று முதல் விசாரணைகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு!

0
54

நாட்டின் உச்சபட்ச அதிகாரம் மிக்க ஒரு அமைப்பாக இருப்பது உச்ச நீதிமன்றம். இங்கே அரசியல் சாசன அமர்வுகள், தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

கடந்த 2018 ஆம் வருடம் உச்சநீதிமன்ற நடைமுறைகளை நேரலையில் ஒளிபரப்புவதற்கு அனுமதி வழங்கி வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பானது 4 வருடங்கள் கழித்து இன்று அமலுக்கு வருகிறது.

இன்று முதல் நேரலையில் வழக்குகளை ஒளிபரப்பும் வழக்கத்தை ஆரம்பிக்கலாம் என்ற முடிவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு யு.லலித் தலைமையில் நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

முதல் நாளான இன்று பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு, மகாராஷ்டிரா சிவ சேனா கட்சி அரசியல் வழக்கு, டெல்லி அரசு vs மத்திய அரசு, அதிகார போட்டி உள்ளிட்ட வழக்குகள் நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளனர்.

முதல் கட்டமாக வழக்கு விசாரணைகள் ஒளிபரப்பானது யூடியூப் சேனல்களில் செய்யப்படும் என்றும் அதன் பிறகு இதனை உச்ச நீதிமன்றம் மூலமாக ஏற்படுத்தப்பட்ட இணையதளத்தில் வெப்கேஸ்ட் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2018 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொடுத்தது.

ஆகவே பாலியல் குற்றங்கள், திருமண தகராறுகள் உள்ளிட்ட வழக்குகளை தவிர்த்து மற்ற முக்கியத்துவம் பெற்ற வழக்குகளை உச்ச நீதிமன்றம் நேரலையில் ஒளிபரப்பும் என்று தெரிகிறது.

தற்சமயம் ஓடிஸா, குஜராத், பிஹார், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உயர்நீதிமன்றம் தங்களுடைய வழக்கு விசாரணையை நேரலையில் ஒளிபரப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.