40 யை நெருங்கும் உயிர் பலி 4 லட்சத்தை  நெருங்கும் சுவாமி தரிசனம் !! புனித யாத்திரை பயணம்!!

0
33
Swami darshan approaching 40 lakhs near 40 lives!! Pilgrimage!!
Swami darshan approaching 40 lakhs near 40 lives!! Pilgrimage!!

40 யை நெருங்கும் உயிர் பலி  4 லட்சத்தை  நெருங்கும் சுவாமி தரிசனம் !! புனித யாத்திரை பயணம்!!

அமர்நாத் யாத்திரை சென்றால் பாவங்கள் விலகும் என்றும் பலர் நம்பிகிறார்கள். அமர்நாத்தில் உள்ள குகை கோவில் 5000 ஆண்டுகள் பழைமையானது என்று புராணங்களில் உள்ளது. மேலும்  ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை  தரிசிக்க  லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கியது  ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பயணத்தை மேற்கொள்வதற்கு பக்தர்களுக்கு பல ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளது.  அதனையடுத்து இந்த குகை கோவிலுக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. இதற்கு பால்டால் வழியாக சென்றால் 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும்.

மேலும் இந்த யாத்திரையின் பொது கோவிலை சென்றடைய ஹெலிகாப்டர் சேவைகளும் உள்ளது. இந்த நிலையில் 28 நாட்கள்  முடித்த நிலையில் இதுவரை 3.77  லட்சம் பக்தர்கள் குகை கோயிலை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 36  ஆக அதிகரித்துள்ளது. குகை கோவில் உயரமான பகுதியில் அமைந்துள்ளதால் குறைத்த அளவில்  ஆக்ஸிஜன் கிடைக்கும். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த யாத்திரை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில் 2, 050 பேர் அடங்கிய புதிய குழு இன்று காலை பகவதி நகரில் இருந்து இன்று குகை கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்கள். அதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும்  சாதுக்கள் பால்தால் வழியாக சென்றுள்ளர்கள்.

ஆலய அதிகாரிகள் தெரிவித்துள்ளர்க்ள. யாத்திரை செல்லும் பகுதிகளில் மோசமான வானிலை தொடர்கிற காரணத்தால் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்ய வாய்ப்புஉள்ளது.

 

author avatar
Jeevitha