ஆட்டத்தை தொடங்கிய சைலேந்திரபாபு! கடும் அதிர்ச்சியில் கொண்டார்கள்!

0
94

நேற்றைய தினம் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தென்மண்டல காவல்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்ற தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உரையாற்றும்போது, ரவுடிகள் சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு சில சம்பவங்கள் தென்மண்டலத்தில் நடந்து வருகிறது. இந்த ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போன்ற மிகக் கடுமையான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

குண்டர்கள் மீது இருக்கின்ற பழைய வழக்குகளை தூசிதட்டி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு கட்டப் பஞ்சாயத்து மற்றும் கந்துவட்டி, கஞ்சா கடத்தல், இதைப் போன்ற சட்ட விரோத சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

காவல் நிலையத்திற்கு குழந்தைகள் மற்றும் மகளிர் குறித்த புகார்கள் வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இணையதளம் மூலமாக நிதி முறைகேடு செய்து அவர்களை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

காவல் நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்களிடம் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினர் கண்ணியமாக நடந்து கொள்வதை உயரதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மகளிர் காவல் நிலையங்களை மிக சிறப்பாக செயல்படுத்த வேண்டும் அதோடு காவல் துறையைச் சார்ந்த எல்லோரும் மனநிலையை அமைதிப்படுத்தும் விதத்தில் யோகா பயிற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்று தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவுரைகளை வழங்கி இருக்கின்றார்.