கோவை மாஸ் தட்டி தூக்கிய கோப்பை!! ரூ.50 லட்சம் பரிசு தொகை!!

கோவை மாஸ் தட்டி தூக்கிய கோப்பை!! ரூ.50 லட்சம் பரிசு தொகை!! திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் நெல்லை அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக லைக்கா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.ரூ.50 லட்சம் பரிசை தட்டிச் சென்றுள்ளது. கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் கோவை அணியை எதிர்த்து நெல்லை அணி விளையாடியது. கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் … Read more

12 அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

12 அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? டி 20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடந்த நிலையில் அதற்கு முந்தைய ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்து கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு நடக்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அனைத்து அணிகளும் … Read more

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் : ஜப்பானை சேர்ந்த வீராங்கனை சாம்பியன் பட்டம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந்  தேதி தொடங்கிய அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நீயுயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி போட்டியில் நவாமி ஒசாகாவும், அஸ்ரென்காவும் வென்றனர்.  பின்னர் இருவரும் நேற்று நடந்த இறுதிபோட்டியில் மோதினர். நவாமி ஒசாகா ஜப்பானை சேர்ந்தவர் மற்றும் அஸ்ரென்கா பெலாரசை சேர்ந்தவரும் ஆவார். இருவரும் ஆடிய முதல் செட்டில்  அஸ்ரென்கா 6-1 என  எளிமையாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் சிறப்பான ஆட்டத்தை … Read more

சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கனடாவை சேர்ந்த மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 1-6 என ராவ்னிக் கைப்பற்றினார். அதன்பின் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில், ஜோகோவிச் 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.