12 அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

0
109

12 அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

டி 20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடந்த நிலையில் அதற்கு முந்தைய ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்து கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு நடக்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.

அனைத்து அணிகளும் தங்கள் அணியை அறிவித்துவிட்டன. சூப்பர் 12 சுற்றுக்கான தேர்வில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ஆகிய 8 அணிகள் நேரடியாக தேர்வு பெற்று விட்டன.

மீதமுள்ள நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகளில் ஏ பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ‘பி’ பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் உள்ளன. இந்த அணிகள் தங்களுக்குள் மோதி முதல் 2 இடங்களைப் பிடிக்கும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகும்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு 13.30 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 6.65 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக அளிக்கப்படும். அரையிறுதியில் தோற்று வெளியேறும் இரு அணிகளுக்கு 4.56 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்படும் என ஐசிசி கவுன்சில் அறிவித்துள்ளது.