கோவை மாஸ் தட்டி தூக்கிய கோப்பை!! ரூ.50 லட்சம் பரிசு தொகை!!

0
37

கோவை மாஸ் தட்டி தூக்கிய கோப்பை!! ரூ.50 லட்சம் பரிசு தொகை!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் நெல்லை அணியை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக லைக்கா கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.ரூ.50 லட்சம் பரிசை தட்டிச் சென்றுள்ளது. கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் கோவை அணியை எதிர்த்து நெல்லை அணி விளையாடியது. கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் கோவை அணி கோப்பையை பகிர்ந்துகொண்டது. இதனால் தனியாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் கோப்பையை தட்டி சென்றுள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற கோவை அணி கேப்டன் ஷாரூக் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆரம்பமே அதிரடியாக விளையாடிய கோவை அணி 20 ஓவர் முடிவில் லைக்கா கோவை 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக முகிலேஷ் 51 ரன்கள் உடனும் ராம் அரவிந்த் 10 ரன்கள் உடன் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தனர்.

நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் மற்றும் வாரியர் 2 விக்கெட்டுகள் எடுத்தனர் .

206 ரண் வெற்றிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. கடின இலக்கை எதிர்கொண்டு நெல்லையணி ஆடத் தொடங்கியது. ஆனால் ஆரம்பமே நெல்லையணிக்கு அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. வீரர்கள் கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேற, மொத்தமாக 15 ஓவர்களில் 101 ரன்களுக்கு நெல்லை அணி ஆல் அவுட்டாகியது.

கோவை அணி சார்பாக ஜதாவேத் சுப்ரமணியன்4 விக்கெட்டுகளையும், கேப்டன் ஷாரூக் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் கோவை அணி தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

கோப்பையை வென்ற கோவை அணிக்கு ரூபாய் 50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த நெல்லை அணிக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

author avatar
Parthipan K