4 மணி நேரத்தில் 4 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்!

4 மணி நேரத்தில் ஆடுகள் நான்கு கோடிக்கு இன்று விற்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. மற்ற இறைச்சிகளை விட ஆட்டிறைச்சி அதிக விலையிலேயே விற்கப்படும். ஆடுகள் கிராமப்புறங்களில் வளர்க்கப்பட்டு அயல்நாடு வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் பிராய்லர் கோழி இறைச்சிகளை சாப்பிடுபவர்கள் கூட விசேஷ நாட்களில் ஆட்டிறைச்சி வாங்கி சமைக்கவே விருப்பப்படுவர். கோவில்களில் கிடா வெட்டப்படும் படும் வழக்கம் நம்மிடம் காலம் காலமாகவே உள்ளது. இந்த நிலையில் தீபாவளி நாளன்று ஆட்டிறைச்சி … Read more

முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமத்தை 36 வயதான வேல்முருகன். இவர் அதே பகுதியில் உள்ள 27 வயதான சத்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் வேல்முருகன். இதன் விளைவாக சத்யா கர்ப்பமாகி உள்ளார். இதனை கேட்டு உறைந்து போனார் வேல்முருகன். மேலும், இப்போதைக்கு குழந்தை வேண்டாம். விபரீதம் ஆகிவிடும். அதனை கலைத்து விடலாம் எனக் கூறியுள்ளார். … Read more

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பிக்கு 27ம் தேதி வரை காவல்.!!

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை பிற்பகல் வரை போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் சிபிசிஐடி விசாரணை நிறைவடைந்துள்ளது. அதன் காரணமாக கடலூர் திமுக எம்.பிக்கு அக்டோபர் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி ஆலை … Read more

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!

Justice for lovers after 18 years!

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 18 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன். இவர் 25 வயதான தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் … Read more

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

பரபரப்பு: பிறந்த சில மணி நேரமான பச்சிளங்குழந்தை எரிந்த நிலையில் மீட்பு!! போலீசார் தீவிர விசாரணை!! கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில், இந்திராநகர் பகுதி அருகே குப்பை ஒன்றில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் உடலானது எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிறந்து சிலமணி நேரமே ஆன குழந்தையை மண்ணெண்ணை ஊற்றி எரித்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தை ஆணா, பெண்ணா … Read more

50 பைசா அஞ்சல் அட்டைகளை வைத்து பாடம் கற்பிக்கும் ஆசிரியை!! புகழ்ந்து தள்ளும் பொதுமக்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில், ஸ்மார்ட் போன் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்காக அஞ்சலட்டை மூலமாக கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை மகாலஷ்மி அவர்கள் பாடம் கற்பிக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், ஆன்லைன் மூலம் பாடம் கற்பதற்கு ஸ்மார்ட்போன் வசதி இல்லாத கிராமப்புற … Read more

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு

4 killed in accident at Cuddalore chemical plant Injury to 20 persons

கடலூர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி! 20 நபர்களுக்கு பாதிப்பு கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிப்காட்டில் இயங்கிவரும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.20 நபர்களுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற நிறுவனம் பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறது. இந்த ஆலைக்கு அருகிலுள்ள பொதுமக்கள் ஷிப்ட் அடிப்படையில் வேலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 6 மணி சிப்டிற்கு வந்து … Read more

நான் குதித்தால் உனக்கென்ன?… ஸ்டாலினுக்கு எடப்பாடி கொடுத்த பதிலடி…!

Stalin

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தங்களுடைய வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பலரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று கடலூர் மாவட்டம், புவனகிரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நான் ஊர்ந்து … Read more

தலையை வெட்டிய ரவுடி! ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை!

கடலூரைச் சார்ந்த தாதா வீரா என்பவருக்கும் கிருஷ்ணா என்பவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக தெரிகின்றது இந்த நிலையில் கிருஷ்ணா வீராவை தலையை வெட்டி கொலை செய்து இருக்கின்றார். அதனை எடுத்து கிருஷ்ணா பண்ருட்டி அடுத்து இருக்கின்ற குடுமியான்குப்பம் பகுதியில் மறைந்து இருந்ததாக தெரிகிறது. ஆகவே கிருஷ்ணாவை கைது செய்வதற்காக போலீசார் அந்த பகுதியை சென்றடைந்தார்கள். அந்த சமயத்தில் கிருஷ்ணா காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதில் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் … Read more

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்கள் – வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – மழை நீரில் மூழ்கிய பயிர்கள்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக  முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். சுமார் 1 … Read more