திமுக இத்தனை இடங்களில் போட்டியிடுகிறதா? வாயைப் பிளக்கும் ஆளும் தரப்பினர்!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக 178 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் 56 இடங்களில் போட்டியிடுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தொகுதிகளும், அதேபோல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஐந்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஐந்து தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், மனிதநேய … Read more

திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு!

MK Stalin With Rahul Gandhi-News4 Tamil- Latest Political News in Tamil

திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு! 2021 சட்டமன்ற தேர்தல் தேதியை ஏப்ரல் 6 என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் தமிழகத்திலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகளை நடத்தி கொண்டு வருகிறது. அதிலும் முக்கியமாக அதிமுக கூட்டணியில் பாமகவினர் கேட்ட வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு நிலுவையில் இருந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் … Read more

தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை முதல் கட்சியாக பெறத்தொடங்கியது திமுக. அந்த விதத்தில் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் விருப்பமானவை கொடுத்திருக்கிறார்கள் ஏராளமானோர். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்சியின் சார்பாக போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தவர்களுக்கு வேட்பாளர்களின் நேர்காணல் குறித்த அறிவிப்பை திமுக வெளியிட்டிருக்கிறது. வேட்புமனு கொடுத்தவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் … Read more

தொடங்கியது பேச்சுவார்த்தை! விரைவில் தொகுதிப் பங்கீடு!

தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பமாகிவிட்டது இதுவரையில் ஓரளவிற்கு இருந்த தேர்தலுக்காக வேலைகள் இனி வேகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.ஆகவே அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. என்னும் அரசியல் கட்சிகளில் மீதம் இருப்பது தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்ப்பாளர் அறிவிப்பு மட்டுமே என்று சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன் ரெட்டி மற்றும் சி.டி.ரவி போன்றோர் தமிழக முதல்வர் … Read more

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்!

Anna Arivalayam

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்! வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் 6 கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு உட் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. இதையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக குழுவுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள் ஒதுக்கீட்டை உறுதி செய்தி செய்தனர். தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும், சீர்மரபினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும் சட்ட முன்வரைவை … Read more

தமிழகத்தில் அனல் பறக்கும் கூட்டணி பேரங்கள்! உடையும் முக்கிய கட்சிகளின் கூட்டணி!

தமிழ்நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று நேற்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பு சட்டசபை பதவிக்காலம் இந்த வருடம் மே மாதம் 23ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.ஆகவே 2021 மே மாதம் 24ம் தேதிக்குள் அடுத்த சட்டசபையை தேர்வு செய்வதற்கான தமிழக சட்டசபைத் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டு அதற்குள் புதிய சட்டசபை பதவி ஏற்க வேண்டும் என்பது விதி. ஆகவே தமிழகத்துடன் கேரளா, … Read more

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்! அரசிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் திமுக!

சத்துணவு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் போன்ற எல்லோரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அங்கீகரித்து ஊதியம் வழங்க வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்றையதினம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள். நாகர்கோவிலில் … Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுகவின் மூத்த நிர்வாகி! பரபரப்பான திமுக தலைவர் ஸ்டாலின்!

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நிலை பாதிப்பு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பொன்முடிக்கு உடல்நலக் குறைவு காரணமாக, அறுவை சிகிச்சை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு பித்தப்பை பிரச்சனை இருந்ததன் காரணமாக, உடல்நலக் கோளாறு உண்டானது எனவும், அது அறுவை சிகிச்சைக்கு பின்னர் சீராகிவிடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு முன்னரே பொன்முடி கடந்த 6ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு … Read more

பட்ஜெட் அதிமுகவை சாடிய துரைமுருகன்! ஆவேசப் பேட்டி!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து தாக்கல் செய்து வருகின்றார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கின்ற இயற்கை ஆலமர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி விட்டு சாமி தரிசனம் முடித்து பட்ஜெட் தாக்கல் செய்ய கிளம்பி இருக்கின்றார் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். திமுகவின் பொருளாளர் துரைமுருகன் உரையாற்றுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால், திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். … Read more

திமுக கூட்டணியில் வெடித்தது சர்ச்சை! கூட்டணியில் பிளவை ஏற்படுத்திய முக்கிய கட்சி!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடத்தப்பட்ட மாநாடு காரணமாக திமுக கூட்டணியில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மிகப்பெரிய மாநாடு நடத்துவது கடினம். ஆனாலும் இவ்வளவு செலவுகளை செய்து மாநாடு நடத்தியதற்கு காரணம் என்ன என்று விசாரணை செய்தபோது தங்களுடைய பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ஒரு மாநாடு நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. தமிழகத்திற்கு தேர்தல் நெருங்கிவரும் சமயம் என்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு … Read more