இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் குமரி கடல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும். ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அக்டோபர் மாதம் 8 மற்றும் 9ஆம் தேதி … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்து! 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி!

கரூரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இன்று அதிகாலை கார் மூலமாக சீர்காழியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அந்த காரில் ஒட்டுமொத்தமாக 5 பேர் பயணித்ததாக சொல்லப்படுகிறது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகில் பேரையூர் என்ற கிராமத்தில் இன்று அதிகாலை கார் சென்று கொண்டிருந்தபோது காருக்கு பின்னால் வேகமாக வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. ஆகவே அந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று … Read more

தாயின் மரணத்தில் சந்தேகம் புகார் வழங்கிய மகன்! புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை குன்னம் அருகே பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் அருகே இருக்கின்ற பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கத்தின் மனைவி லட்சுமி இவர்களுடைய மகன் கலைவாணன். அதே ஊரிலி ருக்கின்ற மற்றொரு வீட்டில் லட்சுமி மாடியில் குடியிருந்து வந்த சூழ்நிலையில், அவருக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது அதோடு உடலில் பல பிரச்சனைகளும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சென்ற மாதம் 18ஆம் தேதி அவர் இறந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இயற்கையாக மரணமடைந்து விட்டதாக நினைத்து அவருடைய உடலை அவருடைய … Read more

பெரம்பலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பாக பல திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதோடு பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பெரம்பலூர் சுற்றுவட்டாரத்தில் அதிகம் வெற்றி பெற்றவர்கள் திமுகவினர் தான் என்று அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இதே பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்ற சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி … Read more

பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்

பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்   நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் மற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் உள்ளதாக கூறி அதிகாரிகளுடன் அதிமுகவை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தமாக தமிழகத்திலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இன்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்களும் … Read more

விவசாயி வீட்டின் மேற்கூரையை பதம்பார்த்த துப்பாக்கி குண்டு! பெரம்பலூர் அருகே பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஒரு விவசாயி இவருடைய மனைவி ராஜாமணி, இவர்களது மகன் பாரதிதாசன், இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மோகனப்பிரியா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அந்த பகுதியில் இருக்கின்ற ஆஸ்பெட்டாஸ் சீட் கூரையுடன் கூடிய வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், சுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் சிறிது தூரத்தில் மலை பகுதி இருக்கிறது .அங்கே அரசு … Read more

பெரம்பலூர் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் பரிதாப பலி!

பெரம்பலூர் புதிய மதன கோபாலபுரம் கம்பன் நகரை சேர்ந்த வைத்தியலிங்கம் பால் வியாபாரி இவருக்கு அவருடைய வீட்டின் அருகே சொந்தமாக இருக்கின்ற நிலத்தில் ஹாலோ பிளாக் கல்லில் கட்டப்பட்ட பழமையான மாட்டுக் கொட்டகை ஒன்று இருக்கிறது. இதனை கடையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அதற்காக கொட்டகையின் ஒரு பகுதியில் மண்ணை நிரப்பி வைத்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மாலை வைத்தியத்தில் மனைவி ராமாயி, அவருடைய தாய் பூவாயி வைத்தியலிங்கத்தின் அண்ணன் கலியபெருமாள், அவருடைய மனைவி … Read more

அதிர்ச்சி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு நோய்த்தொற்று உறுதி!

நோய்த்தொற்று பரவலுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அதனையும் மீறி நோய்த்தொற்று பரவல் தற்சமயம் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றுப்பரவலுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசிகளின் இரண்டு தவணைகளையும் செலுத்தி கொண்ட பிறகும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. அதோடு இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில ,அரசுகள் … Read more

பெரம்பலூரில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள்.!! பொதுமக்கள் அதிர்ச்சி.!

திருவாச்சூரில் மீண்டும் மர்ம நபர்கள் கோயில் சாமி சிலைகளை உடைத்து அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிலின் துணைக் கோயிலாக பெரியசாமி, செங்கமலையார் கோயில்கள் மலையில் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி பெரியசாமி கோயிலில் ஐந்திற்கும் மேற்பட்ட சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருந்தன. இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு, போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவாச்சூர் பெரிய … Read more