தமிழர் கலாச்சாரம் இருக்கும் போது கொரானா தொற்று ஏற்படாது : பிரதமர் மோடி பெருமிதம்

0
67

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று சீனா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நோய் வராமல் தடுக்க பல்வேறு குறிப்புகள் சொல்லப்பட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வமாக மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் இருமல் தும்மல் கைகுலுக்குவது தொடுவது போன்ற நேரடி தொடர்புகள் மூலமாகவே அதிகம் பரவுகிறது.

இதனால் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க முகமூடி பயன்படுத்துவதோடு வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவும் படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் பிரதமர் மோடி கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க கை குலுக்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு பதிலாக தமிழர்களின் கலாச்சாரமான கும்பிட்டு வரவேற்கும் பழக்கத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார். இது தமிழர்களை பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K