இன்று தமிழக மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மாநில ஆய்வு மையம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

0
119

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்டபகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சிலர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகும் என சொல்லப்படுகிறது.

இன்று குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையையொட்டிருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். அதாவது, மணிக்கு 40 முதல், 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு, பகுதிகள் மற்றும் அதனையொட்டி இருக்கக்கூடிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல், 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும். ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.