பா.ஜ.க தலைவர்களுக்கு அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் தமிழக பா.ஜ.க!

0
102

பா.ஜ.க தலைவர்களுக்கு அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் தமிழக பா.ஜ.க!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தது.ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் கொரோனாத் தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்தது.தேர்தலில் 72.81 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.மே மாதம் 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின.திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது.மீதமிருக்கும் 75 தொகுதிகளில் அ.தி.மு.க கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன.தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முறையே தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்திருந்தன.இந்திய தேசிய காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.க 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி,திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன்,கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் மற்றும் மொடக்குறிச்சி தொகுதியில் டாக்டர் சி.கே.சரஸ்வதி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சமீபத்தில் தமிழகத்தின் முன்னாள் பா.ஜ.க தலைவரான எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை,மீன்வளம்,கால்நடை மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.பின்னர் தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது அப்போது இருந்த பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பா.ஜ.க சார்பில் தேர்தலில் வெற்றி பெறும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தார்.இன்று சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.கவின் நான்கு மாவட்டத் தலைவர்களுக்கு இன்னோவா காரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரிசளித்தார்.கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார்,நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன்,ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் மற்றும் கன்னியாக்குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோருக்கு இன்னோவா காரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பரிசளித்தார்.

author avatar
Parthipan K