பொங்கலோ பொங்கல்! குடிமகன்களுக்கு அதிர்ச்சியளித்த டாஸ்மாக் நிறுவனம்!

0
78

தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.அதன்படி பல கட்டுப்பாடுகள் மாநிலத்தில் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி இருக்க கூடிய ஒரு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனவரி மாதம் 15ஆம் தேதி பொங்கல் தினத்தன்று மற்றும் திருவள்ளுவர் தினமான 18ஆம் தேதி மற்றும் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினம் மற்றும் குடியரசு தினமாக விளங்கக்கூடிய 26ம் தேதி மதுபானம் விற்பனை இல்லாத தினங்களாக அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற கேளிக்கை அரங்குகள் உள்ளிட்டவற்றை பொறுத்தவரை கடையின் மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டாஸ்மாக்கை பொருத்தவரையில் வருடம் முழுவதும் லாபம் இருந்தாலும்கூட தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட பண்டிகை தினங்களில் தான் இதன் லாபம் உச்சத்தைத் தொடும் அளவிற்கு செல்லும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளை மூடி இருப்பது தமிழக குடும்பங்களுக்கு நல்ல விஷயம்தான் என்று சொன்னாலும், தமிழக அரசுக்கு இது மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ஆனாலும் வருடம் முழுவதும் தமிழகத்தில் இருக்கக்கூடிய குடிமகன்கள் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னுடைய குடும்பத்தார்களை துன்புறுத்தும் செயல் நடைபெற்றாலும், இந்த பண்டிகை காலங்களிலாவது அவர்கள் இந்த டாஸ்மாக் மூடல் காரணமாக, மதுபானம் அருந்தாமல் நல்ல முறையில் தங்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடுவார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது

அதே நேரம், இந்த மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆகவே அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழக தாய்மார்களின் ஒட்டுமொத்த எண்ணமாக இருக்கிறது.