இந்த காலத்திலும் இப்படிப்பட்ட ஆசிரியர்களா..! மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ஏற்ற ஆசிரியர்கள்!!

0
60

மதுரையில் திருமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அப்பள்ளியின் ஆசிரியர்களே செலுத்துவதாக ஓர் உன்னதமான முடிவை எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரானா வைரஸின் தாக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் கல்வியும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. மாணவர்களின் கல்வி நலன் கருதி அரசுத்தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது அரசின் உத்தரவையடுத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்ளிட்டவைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு 2020 – 21 ஆம் ஆண்டுக்கான மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அவர்களே செலுத்துவது என கடந்த சுதந்திரத் தினத்தன்று முடிவெடுத்தனர்.

அந்த வகையில் தற்போது பள்ளியில் சேரும் மாணவர்களின் 2020 – 21 ஆண்டுக்கான மாணவர்களின் சேர்க்கை கட்டணம் மற்றும் பிறக்கல்வி செலவுகள் உள்பட எந்த கட்டணமும் செலுத்தாமல் பள்ளியில் சேர்ந்து கொள்ளலாம் என ஆசியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இப்பள்ளியானது பன்னிரண்டாம் வகுப்பில் 94% மாணவர்களையும், பதினொன்றாம் வகுப்பில் 97% மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K