திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சியில் அமராது:! வியாபாரி கூட்டமைப்பினர் எச்சரிக்கை!

0
51

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக ஆக்கவேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் கனவாகும்.ஆனால் சில நாட்களாக மதுரையை துணை தலைநகரமென்று அமைச்சர்கள் கூறி வருவதை கண்டித்து வியாபாரி கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1983-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது, திருச்சியை துணைதலைநகரமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.ஆனால் எம்ஜிஆரின் இந்த முடிவிற்கு பல எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இருந்தபோதிலும் திருச்சியை துணைதலைநகரமாக மாற்ற வேண்டுமென்று அவர் தொடர்ந்து முயற்சித்தார்.ஆனால் இந்திரா காந்தி அவர்களின் மரணம் மற்றும் எம்ஜிஆர் அவர்களின் உடல் நலக் குறைவு,போன்ற காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

எம்ஜிஆரின் இந்த கொள்கையை சுட்டிக்காட்டி,திருச்சி இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டுமென்பது மறைந்த முன்னாள் முதல்வரின் கனவாக இருந்தது,ஆனால் தற்போது அமைச்சர்கள் மதுரையை துணை தலைநகரம் என்று கூறி வருவது எம்ஜிஆரின் கொள்கையை மறந்து விட்டார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என திருச்சி வியாபாரி கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

கொரோனா காலக்கட்டத்திலும் இரண்டாவது தலைநகரம் பேச்சை அமைச்சர்கள் ஏன் எடுக்க வேண்டும் என்பதற்கு, முதல்வர் சரியான விளக்கம் அளிக்க வேண்டுமென்று வியாபாரி கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் அவர்கள்,திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்காத கட்சி ஆட்சியில் அமராது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Parthipan K