திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

0
167

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

திராட்சை பழத்தில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். இயற்கை கொடுத்துள்ள மிகச் சிறந்த பழங்களில் ஒன்றாக இருப்பது திராட்சை. இந்த பழமானது, கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. இதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

திராட்சைப் பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு சத்துக்கள், வைட்டமின் பிஏபி 6,நார்ச்சத்து, ஆன்ட்டி, ஆக்சிடென்ட் போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. இருதயத்தை பலப்படுத்தும் தன்மை திராட்சை பழங்களை அதிகம் உள்ளது.

திராட்சை பழத்தின் அதிகப்படியான பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது. இதை இதய தசைகளை வலிமையாக்குவதோடு இதயத்தை அடைப்பு உண்டாக்கக்கூடிய ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது. இருதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை பழம் அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. நம் உடல் முழுவதும் ரத்த நாளங்கள் சீராக இயங்குவதற்கும் இவை முக்கிய பங்கு வகிக்கிறது. திராட்சை பழங்களில் அதிக படியான பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது 100 கிராம் திராட்சை பழத்தில் 191 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது இவை ரத்த நாளங்களை சீராக செயல்படுத்து உதவுகிறது.

ஆன்ட்டி கேன்சர் பிராபர்ட்டிஸ் நிறைந்த பலமாக திராட்சை பழங்கள் உள்ளது இவை கேன்சர் வராமல் தடுக்கிறது. திராட்சை பழத்தை ஜூஸ் செய்து ஆரம்பக் கட்டத்தில் உள்ள கேன்சர்களை வராமல் தடுக்க உதவுகிறது. மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு திராட்சை பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகம் தலைவலி மற்றும் மயக்கம் வருவதை தடுக்கிறது மூளையில் உள்ள ரத்த நாளங்கள் சீராக செயல்படவும் இவை உதவுகிறது.

author avatar
Parthipan K