தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!!

0
147
#image_title

தாயை கொன்று சூட்கேசில் வைத்த மகள்! சடலத்துடன் வந்து போலிஸிடம் சரண் அடைந்தார்!

 

பெங்களூருவில் தாய்க்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மகள், சூட்கேசில் சடலத்தை வைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவை சேர்ந்த மூதாட்டி பீவாபால் என்மவரின் மகள் சோனாலி சென் என்பவருக்கும் மென்பொறியாளர் சுப்ரித் சென் அவருக்கும் பத்து ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் பொங்களூரூவில் உள்ள தனியார் பிளாட்டில் வசித்து வந்தனர். பீவாபால் அவர்களின் கணவர்  2018ம் ஆண்டு இறந்துவிட்டதால்  அவர் மகளின் வீட்டுக்கு வந்து தங்கி வசித்து வந்தார்.

 

இதையடுத்து சோனாலி சென் அவர்களின் மாமியார் அவர்களுக்கும் மூதாட்டி பீவாபால் அவர்களுக்கும் தினமும் சண்டை ஏற்பட்டது. இவர்களின் சண்டையால் சோனாலி சென் அவர்கள் தனது வேலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விட்டுவிட்டு இவர்களுடன் வீட்டிலேயே இருந்தார்.

 

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேரனை பீவாபால் அவர்கள் திட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சோனாலி அவர்களின் மாமியார் உன் தாயை கண்டித்து வை என்று சோனாலியிடம் கூறினார். இதையடுத்து கோபம் அடைந்த சோனாலி தாய் பீவாபாலை கடுமையாக திட்டியுள்ளார்.

 

அப்போது பேரனை கண்டிக்கும் உரிமை கூட எனக்கு இல்லையா. எனக்கு தூக்க மாத்திரை.கொடுத்து கொன்று விடு என்று சோனாலியிடம் பீவாபால் அவர்கள் கூறினார். அதற்கு சிறிதும் கூட யோசிக்காமல் சோனாலி அவர்கள் தாய் பீவாபால் அவர்களுக்கு 20 தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

 

இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தாய் பீவாபால் அவர்கள் வயிறு வலியால் கதறியுள்ளார். இதற்கு மகள் சோனாலி அவர்கள் ஏன் இப்படி கதறுகிறாய் என்று கூறி  தான் வைத்திருந்த துப்பட்டாவை வைத்து தாய் பீவாபால் அவர்களின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

 

கொலை செய்து விட்டு டிராவல் சூட்கேசில் தாய் பீவாபால் அவர்களின் சடலத்தை வைத்து அதன் மீது தந்தையின் படத்தையும் வைத்து வாடகை டாக்சி மூலமாக மைகோ லே அவுட் காவல் நிலையத்துக்கு நள்ளிரவில் சென்றுள்ளார்.

 

காவல் நிலையத்திற்கு சென்ற சோனாலி சென் அவர்கள் “என் தாயை கொன்று விட்டேன். சூட்கேசில் சடலம் உள்ளது. தந்தை சென்ற இடத்துக்கே அனுப்பி விட்டேன். என்னை சிறைக்கு அனுப்புங்கள்” என்று கூறினார். அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் சோனாலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூரு மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.