அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி! இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள்!

0
214
#image_title

இன்று சரோஜாதேவியின் 86வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று தமிழ் மக்களால் அடைமொழி காணப்பட்ட இவர், எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகிய இந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து அன்றைய மக்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

 

என்னதான் கன்னடத்திலும் தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் நாடோடி மன்னன் படத்தின் மூலம் ஒரு மிகச் சிறந்த நடிகையாக காணப்பட்டார்.

 

அதன்பின் அனைத்து படங்களிலும் அனைத்தும் முன்னணி நடிகர்களுடனும் நடித்து 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து படங்களிலும் நடித்தார்.

 

1960 களில், சரோஜா தேவி தென்னிந்தியப் பெண்கள் மத்தியில் ஒரு ஃபேஷன் ஐகானாக ஆனார். அவர் உடுத்தும் புடவைகள் , ரவிக்கைகள், நகைகள், சிகை அலங்காரங்கள் பெண்கள் பின்பற்ற தொடங்கினர். குறிப்பாக, எங்க வீட்டுப் பிள்ளை  மற்றும் அன்பே வா ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் இருந்து அவரது புடவைகள் மற்றும் நகைகள் பத்திரிகைகளில் பரவலாக பிரபலமடைந்தன.

 

எத்தனையோ படங்களில் நடித்த பின்பு 1967 அதன் பின் புது நடிகைகளின் வருகையால் எம்ஜிஆரின் படத்தில் அதிகமாக நடிக்கவில்லை.  அதன் பின் சிவாஜி கணேசன் ரவிச்சந்திரன் ஆகியோர்களுடன் சேர்ந்து நடித்தார்.

பத்ம ஸ்ரீ பத்மபூஷன் ஆகிய விருதுகளை இவர் வென்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல், தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களுக்காக ஏராளமான மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

1986 ஆம் ஆண்டு சரோஜா தேவியின்  கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். பின் சினிமாவிற்கே வராத அவர்,  வர்புறுதலின் பெயரால் கன்னடத்திலும் தெலுங்கிலும் நடித்தார்.

 

எத்தனையோ முறை எம்ஜிஆர் , ராஜீவ் காந்தியும் அரசியலுக்கு வர சொன்ன பொழுது, அரசியல்  வேண்டாம் என்று சொல்லி அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

 

எம் ஆர் ராதா அவர்களின் வாயிலிருந்து ” நல்ல பொண்ணு” என்ற பெயரை எடுத்தவர் சரோஜாதேவி தான்.

இப்பொழுது சரோஜாதேவி தற்போது பெங்களூரில் குடியேறி சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனது கணவர் மற்றும் அவரது தாயார் பெயரில் பல நன்கொடை முகாம்களை ஏற்பாடு செய்துள்ளார். அவர் தொண்டு அறக்கட்டளைகள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் சுகாதார திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

இன்று 86 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அவர் , நலமுடன் இருக்க வாழ்த்துங்கள்.

 

author avatar
Kowsalya