அன்றைய சூப்பர் ஸ்டார் வரிசையில் இவரும் ஒருவர்! ஆனால் இன்று!

0
270
#image_title

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் வந்து போயிருக்கிறார்கள். அதிலும் தான் பணியாற்றிய 5 ஆண்டுகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகர் சுதாகர். இவர் தெலுங்கு பூர்வீகத்தை சேர்ந்தவர்.

 

ரஜினி கமல் அவர்கள் தலை எடுக்கத் தொடங்கியதற்கு முன்பு இவர் ஒரு காதல் மன்னன். பெண்களின் நாயகன்.

 

சுதாகரின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். இவர்தான் கடைசி. BA படித்துக் கொண்டிருக்கும் பொழுது திரைப்படத்தில் ஆசை அதிகமாகி , அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார் சுதாகர். சுதாகரும் சிரஞ்சீவியும் கல்லூரி நண்பர்கள்.

 

பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தான் சுதாகர் அறிமுகம் ஆகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகாவும் அறிமுகம் ஆனார். அதன் பிறகு இந்த ஜோடி மட்டும் 11 படங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

அறிமுகமான சில ஆண்டுகளிலேயே ஏராளமான படங்களை நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

 

அதிலும் இந்த பாடல்களை யாராலும் மறக்க முடியாது.

 

“சிறு பொன்மணி… அசையும்… அதில் தெறிக்கும்… புது இசையும்…”

 

கோயில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ… இங்கு வந்ததாரோ…”

 

“மாஞ்சோலை கிளிதானோ.. மான் தானோ… வேப்பந் தோப்பு கிளியும் நீதானோ..”

 

“ஆயிரம் மலர்களே மலருங்கள்… அமுத கீதம் பாடுங்கள்…”

 

“காதல் வைபோகமே காணும் நன்னாள் இதே… வானில் ஊர்கோலமாய்…”

 

“பொன் மான தேடி நானும் பூவோட வந்தேன்… நான் வந்த நேரம் அந்த மான் அங்க இல்லே…”

 

இப்படி நன்றாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில், திரைப்பட உலகில் மிகவும் உச்சத்தில் இருந்த பொழுது சந்திரபாபு செய்ததைப் போலவே படபடப்பிற்கு தாமதமாக வருவது, மது போதையில் வருவது என்று இருந்திருக்கிறார். இப்படி அவர் நடந்து கொள்வதனால் இவரது திரை வாழ்க்கை மிகவும் மங்கத்தொடங்கியுள்ளது.

 

தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத சுதாகர் அவர்கள் தெலுங்கில் ஒரு காமெடியனாக நடிக்க தொடங்கினார்.

 

அதன் பின் இவர் இறந்துவிட்டார் என பொய்யான செய்திகள் பரவியது. இவரே முன்வந்து பேட்டி ஒன்றில் அந்த பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

மது போதை ஒருவரின் வாழ்க்கையை எப்படி மாற்றும் என்பதற்கு சுதாகர் அவர்களின் வாழ்கையே உதாரணம்.