எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்!

0
78
The female policeman trapped in Eman's kitchen! Suffering from not being able to even see the face of the newborn baby!
The female policeman trapped in Eman's kitchen! Suffering from not being able to even see the face of the newborn baby!

எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்!

கொரோனா தொற்றானது சீன நாட்டில் உருவாகினாலும் அனைத்து நாடுகளிலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை.அந்தவகையில் முதல் அலையில் இந்தியா பல கட்டுப்பாடுகளுடன் இருந்ததால்,குறைந்த உயிர் சேதத்தை கண்டாலும் இந்த இரண்டாம் அலையில் மக்கள் கொத்துக்கொத்தாக தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டது.இதில் ஏழை,பணக்காரர் எந்த வித்தியாசமும் இன்றி பல கோடி மக்கள் இந்த கொரோனா தொற்றுக்கு பலியானார்.இந்த கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவுகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.

இருப்பினும் தங்களின் உறவுகளை இழந்தவர்கள் பெருமளவு துக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.அந்த வகையில் தற்போது சென்னையில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.நாம் அன்றாடம் வாழ்வின் பாதுகாப்புக்கு,போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறு நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவருக்கு நடந்த சம்பவம் அனைவரையும் கவலையுற செய்கிறது.சென்னை ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருபவர் வசந்தா.இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

காவலர் வசந்தா கர்ப்பமாக இருந்துள்ளார்.இவர் தன் கற்பகால பரிசோதனையை தனியார் மருத்துவமனை ஒன்றில் செய்து வந்துள்ளார்.கர்ப்பமாக இருப்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால் இவர் பரிசோதனை எடுத்துக் கொண்டார்.அதில் காவலர் வசந்தாவிற்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததால் அந்த தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறி விட்டது.அதனையடுத்து இவர் அரசு மருத்துவமனையில் தன் மகப்பேறு சிகிச்சையை மேற்கொண்டார்.திடீரென்று ஒரு நாள் இவருக்கும் பிரசவவலி ஏற்பட்டது.பிறகு அந்த அரசு மருத்துவமனையில் இவருக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இவருக்கு கொரோனா தொற்று உள்ளதால் மருத்துவர்கள் ,காவலர் வசந்தாவை  குழந்தையை தொட்டு பார்க்க அனுமதி அளிக்கவில்லை.இவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.இவரது குழந்தை தனி வார்டியில் இருந்து வந்துள்ளது.திடீரென்று அந்தப் பெண் போலீஸ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.பிறந்த குழந்தையை கண்டு பல கனவுகளுடன் காத்துக்கொண்டிருந்த பெண் போலீஸ்-க்கு ஏமாற்றமே அடைந்தது.குழந்தை பிறந்து அதனைப் பார்க்க கூட முடியாமல் கொரோனாவுக்கு தன் உயிரை இழந்து இந்த பெண் போலீசை கண்டு அப்பகுதியினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.