சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள் பேர் மீது குண்டர் சட்டம் போட உத்தரவு!

0
107

சிறுமி கருமுட்டை விவகாரம்! நான்கு பேர்கள்  மீது குண்டர் சட்டம் போட உத்தரவு!

ஈரோடு மாவட்டத்தில் சுதா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஈரோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டைகளை விற்பனை செய்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட நான்கு பேர் மீது ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் விசாரணையின் போது ஈரோடு மற்றும் பெருந்துறையில் பிரபல தனியார் சுதா மருத்துவமனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். சேலத்தில் உள்ள தனியார் சுதா மருத்துவமனை கடந்த ஆறாம் தேதி சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி கருமுட்டை எடுத்ததில் முறைகேடு நடந்திருப்பது என உறுதி செய்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட சுதா மருத்துவமனையில் இருந்த ஸ்கேன் சென்டர் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் புதிதாக நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. அங்கு நோயாளிகள் குணமடைந்து வீடுகள் திரும்பி உள்ள நிலையில் சேலம் மாவட்ட சுகாதாரப்பணி இணை இயக்குனர் நெடுமாறன் தலைமையினால அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுதா மருத்துவமனையில் உள்ள நுழைவுகள், சிகிச்சை மையம், ஸ்கேன் சென்டர் மற்றும் ஆவண பாதுகாப்பு அறை உள்ளிட்ட இடங்களுக்கு முழுமையாக மூடி சீல் வைத்தனர்.

இதனையடுத்து சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி,போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்தவர் என நான்கு பேர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். இதுதொடர்பான நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் வழங்கப்பட்டது.

author avatar
Parthipan K