சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்! மூன்று பெண்கள் கைது!

0
70
The incident that took place at Salem Junction railway station! Three women arrested!
The incident that took place at Salem Junction railway station! Three women arrested!

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்! மூன்று பெண்கள் கைது!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி சேர்ந்தவர் கணேசன். இவரது  மனைவி வள்ளிவினோதினி (25). இவர்  என்ஜினியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி மதுரையிலிருந்து பெங்களூருக்கு செல்ல நாகர்கோவில் இருந்து பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவு பெட்டியில்  பயணம் செய்து கொண்டிருந்தார்.மேலும் மறுநாள் அதிகாலை 3 50 மணி அளவில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ட்ரெயின் வந்தது.

மேலும் தர்மபுரி நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது அப்போது வள்ளி வினோதினியின் 9 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த வள்ளிவினோதினி சேலம் தர்மபுரிக்கு  இடைப்பட்ட பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் அவரது நகையை திருடி சென்றிருக்கலாம் என சந்தேகமடைந்து தர்மபுரி ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.  அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவா செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த புகார் குறித்த விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் அந்த விசாரணையில்  சேலம் தர்மபுரி ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும்  செல்போன் அங்கு அந்த நேரத்தில் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்ணை  சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் புதுக்கோட்டையில் லிருந்து  வள்ளி வினோதினியை பின் தொடர்ந்து வந்ததாகவும் அவர் படுக்கையில் தூங்கி  கொண்டிருக்கும் பொழுது அவரது பையில்  இருந்து நகை திருடி சென்றதாகவும் தகவல் தெரிந்தது.

அந்த தகவலை கொண்டு மேலும் விசாரணை நடத்திய போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் அதன் நகையே திருடி இருப்பதும் அவர்கள் புதுக்கோட்டையில் குடும்பத்துடன் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் ஆண்டி என்பவரின் மனைவி வெண்ணிலா (40), ரஞ்சித் என்பவரின் மனைவி சத்யா (23), விக்னேஷ் என்பவரின் மனைவி கவிதா (25) போன்றவர்கள் இணைந்து இந்த திருட்டை  செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து ஒன்பது பவுன் நகை மீட்க பட்டு வள்ளிவினோதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ரயில்வே திருட்டு சம்பவத்தில் 5 மாதங்களுக்கு பிறகு தீவிர விசாரணையில் இந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K