நமக்கு பிரியமான இயக்குநர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படங்கள்!!

0
32
#image_title

நமக்கு பிரியமான இயக்குநர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படங்கள்!!

திரையரங்குகளில் ஒரு படத்தை நன்றாக ஓட வைப்பதில் இயக்குநர்களுக்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது.அறிமுக நடிகராக இருந்தாலும் படத்தின் கதை,இயக்கம் நன்றாக அமைந்து விட்டாலே படம் நல்ல வரவேற்பை பெற்று விடும்.அந்த வகையில் பல வெற்றி படங்களை கொடுத்த டாப் 5 இயக்குநர்கள் இறப்பதற்கு முன் அவர்கள் கை வண்ணத்தில் அமைந்த கடைசி திரைப்படம் என்ன? என்ற விவரம் இதோ.

1.மனோபாலா

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்,இயக்குநர்,தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக இருந்தவர்.ஆகாய கங்கை,நான் உங்கள் ரசிகன்,பிள்ளைநிலா,பாரு பாரு பட்டினம் பாரு,ஊர்க்காவலன்,என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர்.இவர் இந்த வருடம் 2023 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.இவர் இயக்கிய கடைசி திரைப்படம் “நைனா”.கடந்த 2002 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.இப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராம்,நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய வேடங்களில் உள்ளிட்டோர் நடித்திருந்தார்.

2.ஜி.மாரிமுத்து

வெள்ளித்திரை,சின்னத்திரை இரண்டிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர்.தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் வாலி,உதயா,யுத்தம் செய்,ஜீவா உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்து விட்டார்.கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் இயக்கிய கடைசி திரைப்படம் “புலிவால்”.கடந்த 2014 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.இப்படத்தில் பிரசன்னா,விமல்,சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

3.மணிவண்ணன்

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகர்,வில்லன் நடிகர்,இயக்குநர் என்று பன்முகம் கொண்டவர்.இதுவரை 400க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து ஜோதி,நூறாவது நாள்,ஆண்டான் அடிமை,அமைதிப்படை,சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கினார்.50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.இவர் இயக்கிய கடைசி திரைப்படம் “ராஜராஜ சோழன்”.கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சத்யராஜ்,சீமான்,ரகுவண்ணன்,மிருதுளா முரளி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

4.கே.வி.ஆனந்த்

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளர்,இயக்குநர்,நடிகர் என்று பன்முகம் கொண்டவர்.20க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான இவர் ‘கனா கண்டேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.அதனை தொடர்ந்து அயன்,கோ,மாற்றான்,அனேகன்,கவண் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு காலமானார்.இவர் இயக்கிய கடைசி திரைப்படம் “காப்பான்”.இப்படத்தில் சூர்யா,ஆர்யா,மோகன்லால்,சாய்ஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.

5.கே.பாலச்சந்தர்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக வலம் வந்தவர்.இவர் ஒரு தயாரிப்பாளரும் ஆவார்.தனது இயக்கத்தில் ரஜினி,கமல் போன்ற பல டாப் நடிகர்களை உருவாக்கியவர்.ஆரம்பத்தில் நாடக கதைகளை எழுதி இயக்கி வந்த இவர் கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.நாணல்,மேஜர் சந்திரகாந்த்,பூவா தலையா,புன்னகை,எதிர் நீச்சல்,வறுமையின் நிறம் சிகப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார்.70க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு கலாமானார்.இவர் இயக்கிய கடைசி திரைப்படம் “பொய் “.இப்படத்தில் உதய் கிரண்,விமலா ராமன்,பிரகாஷ் ராஜ்,ஆதித்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.