பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்!

0
130
#image_title

பனங்கற்கண்டு என்னும் மகத்துவம்! 

நமது சமையல் அறையில், அஞ்சறைப்பட்டியில் உணவுக்காக பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டது. மஞ்சள், மிளகு, சீரகம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல பனங்கற்கண்டு-ம் அற்புதமான மருத்துவ குணத்தை கொண்டது. நாம் பாலில் சேர்த்து சாப்பிடும் பனங்கற்கண்டில்  கூட மருத்துவ குணங்கள் உள்ளன அவை என்னென்ன இங்கு பார்க்கலாம்.

பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு நிவாரணமாக செயல்படும்.

கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மிளகு தூள், நெய் மற்றும் பனங்கற்கண்டு தலா அரை தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டால், தொண்டை வலி மற்றும் தொண்டைக் கட்டு குணமாகும். பசு நெய் – அரை தேக்கரண்டி, சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால், உடல் சோர்வை நீக்கி, சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

பனங்கற்கண்டு போல மஞ்சள், மிளகு, சீரகம் என ஒவ்வொன்றுக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மஞ்சள் ஞாபக மறதியை தடுக்கும் . சீரகம் நமது உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவி செய்யும் சீரகத்தை வெந்நீரில் காய்ச்சி குடித்தால் இரும்புச்சத்து அதிகரிக்கும் உடம்புக்கு மிகவும் நல்லது.

author avatar
Savitha