ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி!

0
129
ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி
ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி

ஆதார் கார்டுல பழைய போட்டோவை மாற்றுவது எப்படி!

எப்படி ஆதார் கார்டு அப்டேட் செய்வது என்பதை இங்கு காணலாம்.

12 எண்களை கொண்ட இந்த ஆதார் அடையாள அட்டை முக்கியமான ஒன்றாக உள்ளது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு துவங்குவது வரை ஆதார் எண்களே கேட்கபடுகிறது . நாடு முழுவதும் சுமார் 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை பெறுவதற்கு புகைப்படம் மட்டும் இன்றி கை விரல் ரேகை, கருவிழி படலம், உள்ளிட்ட தகவலும் பதிவு செய்யப்படும். அதுபோக பெயர், முகவரி , செல்போன் எண் உள்ளிட தகவலும் பெறப்படும்.

அதுபோக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் தகவலும் புதுப்பித்து கொள்ளவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டையில் உள்ள புகைபடத்தை அப்டேட் செய்வதற்கு விதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு புகைபடத்தை அப்டேட் செய்வதற்கு  ரூ. 100 செலுத்தவேண்டும்.

ஆதார் கார்டில் போட்டோ அப்டேட் செய்ய வேண்டும் என்றால் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு நேரில் தான் செல்லவேண்டும் .

ஆதார் மையத்தில் இருக்கும் ஊழியரிடம் பயோமெட்ரிக் தகவல் கொடுக்க வேண்டும்.

அதன் பிறகு மையத்தில் இருக்கும் கேமராவில் லைவ் போட்டோ எடுக்கப்படும்.

இதற்கான கட்டணமாக ரூ. 100 பெறப்படும்.

உங்கள் ஆதார் கார்டில் போட்டோ மாறிவிட்டதா? என்பதை நாம் URN எண் முலமாக செக் செய்து கொள்ளவேண்டும்.

ஆதாரில் போட்டோவை மாற்றுவதற்கு எந்த ஆவணமும் தேவை இல்லை .

“verify & Download” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்து அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்டை பிடிஎப் வடிவத்தில் டவுன்லோட் செய்யலாம் .

author avatar
Parthipan K