பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? தர்மரோ, கர்ணனோ கூட இல்லை!

0
186
#image_title

அன்று பாரத போரின் 14 வது நாள். பாண்டவர்கள் ஐவரும் போருக்கு ஆயத்தமாகி நின்று கொண்டிருந்தனர். இப்பொழுது பாஞ்சாலி கண்ணனை பார்த்து கண்ணா இந்த உலகில் இந்தப் போர் நடைபெறுவது உன்னால். அதற்குக் காரணம் நீயே. அதற்கு பதிலும் நீயே. உன்னால்தான் எல்லாமும் நடைபடுகிறது. இறப்பதும் நீயே, வாழ்வதும் நீயே, யார் இறக்க வேண்டும் என்று முடிவு செய்வதும் நீயே அத்தனையும் நீயே அதனால் இன்று பாரதப்போரில் யார் இறக்கப் போகிறார்கள் என்பது உனக்கு நன்றாகவே தெரியும். இன்னைக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை சொல் என்று பாஞ்சாலி கிருஷ்ணனிடம் கேட்கிறார்.

 

பாண்டவர்கள் அனைவரும் இன்றைக்கு போரில் யார் இறக்கப் போகிறார்கள்? யார் வெல்லப் போகிறார்கள்? என்பதை கேட்க ஆவலுடன் கிருஷ்ணனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அப்பொழுது கிருஷ்ணர் சொன்னார், இன்றைக்கு போரில் யார் இறக்கப் போகிறார்கள் என்று நினைத்து தான் என் மனம் பரிதவிக்கின்றது. இன்றைக்கு போரில் இறக்கப் போகின்றவன் நல்லவனுக்கு நல்லவன். அவனை காட்டிலும் இந்த உலகில் நல்லவர் யாரும் கிடையாது என்று சொல்கிறார்.

 

உடனே அனைவரும் தர்மரை பார்த்து கண்ணீர் விட ஆரம்பிக்கின்றனர். திரௌபதியும் தனது கணவரான தர்மரை பார்த்த இவர்தான் இறக்கப் போகின்றாரா ?என்று நினைத்து மார்பில் கை வைத்து அப்படியே கீழே விழுந்து விடுகின்றார்.

 

அனைவரும் போர்க்களத்துக்கு செல்கின்றனர். அங்கு பீமனை எதிர்த்த போராட விகர்ணன் வருகிறார்.

 

பீமன் விகர்ணனை பார்த்து, விகர்ணா நீ இந்த இடத்தை விட்டு சென்றுவிடு, உன்னை பார்த்தால் எனக்கு கொல்லும் எண்ணம் இல்லை என கூறுகிறார்.

 

அதற்கு விகர்ணன், ஏன்? பீமா என் மீது உனக்கு அவ்வளவு பயமா? என கேட்கின்றார்.

 

அதற்கு பீமன், இல்லை விகர்ணா, கௌரவர்கள் 100 பேர்கள். உன்னைவிட நல்லவன் யாரும் கிடையாது. நீ அறத்தை பின்பற்றி நடப்பவன். அன்று அத்தனை பேரும் திரௌபதியை துயில் இழுக்கும் பொழுது அனைவருக்கும் எதிராக, இங்கு அறம் தவறி அநியாயம் நடக்கிறது! என்று குரல் கொடுத்தாய். அன்று அப்பேற்பட்ட என் அண்ணன் தர்மன் கூட யாரையும் எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் அத்தனை பேரையும் எதிர்த்து நீ குரல் கொடுத்தாய். நீ மிகவும் நல்லவன். நீ பாண்டவர்களுடன் சேர்ந்து விடு. நான் உனக்கு தனியாக ஒரு மகுடம் அளித்து ஒரு நாடு தருகிறேன். நீ அதில் ஆட்சி புரி என்று பீமன் விகர்ணனிடம் சொல்கின்றான்.

 

ஆனால் விகர்ணனோ, ஆம் அன்று அறத்தின் வழியே நான் நடந்தேன். இன்றும் அறத்தின் வழியை தான் பின்பற்றுகின்றேன். நீ கொடுக்கும் மணி மகுடத்திற்காக என் அண்ணனை விடுத்து நான் உன் பக்கம் வந்தால் ,அது என் அண்ணனுக்கு நான் செய்யும் துரோகம். என்னை நம்பி என் அண்ணன் இருக்கிறான். இப்படி செய்தால் அது அறத்தின் வழியாக இருக்காது. அதனால் என்னால் வர முடியாது என்று விகர்ணன் கூறுகின்றான்.

 

இதனால் கோபம் உற்ற பீமன் மற்றும் விகார்ணன் இடையே பெரும் சண்டை நிலவுகின்றது. அப்பொழுதுதான் பீமனுக்கு புரிகின்றது அறத்தை உடையவர்கள் மிகவும் பலசாலிகள். அவர்களை தோற்கடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது. வெகுநேரம் போரிட்ட பின்பு தான் பீமனுக்கு புரிகின்றது.

 

பிறகு தனது கடாயுதத்தால் ஓங்கி ஒரு விகர்ணனை அடிக்கின்றான், பீமன். சிரித்துக்கொண்டே சாவை எதிர்கொண்டு விகர்ணன் இறக்கின்றான்.

 

போர் முடிந்து 5 பாண்டவர்களும் உயிரோடு எந்தவித சேதமும் இல்லாமல் வீடு திரும்பவதை பார்த்து திரௌபதி மிகவும் சந்தோஷமடைகிறார்.

 

ஆனால் கண்ணனிடம் கேட்கிறார், இந்த உலகில் யார் நல்லவரோ? அவர்தான் இன்று இறக்கப் போகின்றார், என்றாய். ஆனால் இந்த உலகில் மிகவும் நல்லவர் எனப் போற்றப்படக் கூடியவர் எனது கணவர் தர்மர் உயிருடன் தான் இருக்கின்றார். யார் மிக நல்லவன் என்று கண்ணனிடம் பாஞ்சாலி கேட்கின்றார்.

 

அதற்கு விகர்ணன் என்ற பதிலை கிருஷ்ணர் சொல்லுகின்றார். நல்லவர்களின் மிகவும் நல்லவர்களாக இருத்தல் என்பது பெரிய விஷயம் கிடையாது. ஆனால் அத்துணை கெட்டவர்கள் இருந்தும் அதில் அறத்தை பின்பற்றி அன்றைக்கு உனக்கு ஒரு அநியாயம் நடக்கும் பொழுது அத்தனை சபையும் முன்னே உனக்காக குரல் கொடுத்து இருந்தவன் விகர்ணன். அறத்தை நம்பியே இருந்தவன். அவன் இருக்கும் வரை கௌரவர்களை நாம் எதுவும் செய்ய முடியாது

அறத்தை வெல்வது அவ்வளவு சுலபம் அல்ல என்று பாஞ்சாலியிடம் கூறுகின்றார்.

எனவே தர்மரை மற்றும் கர்ணனை காட்டிலும் விகர்ணன் மிகவும் நல்லவன் என கிருஷ்ணர் சொல்லுகின்றார்.

author avatar
Kowsalya