கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் உயிரிழப்பு-உறவினர்கள் சோகம்!!

0
91
#image_title

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர் ஒருவர், கடல் சீற்றம் காரணமாக, படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு-உறவினர்கள் சோகம்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வமணி 56. என்பவர் இன்று அதிகாலை 4 மணிக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார். இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென வீசிய சூறைக்காற்றினால், கடலில் அலைகள் வேகமாக எழுந்துள்ளது.

அப்போது படகின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த செல்வமணி படகிலிருந்து நிலைதடுமாறி கடலில் விழுந்துள்ளார். இந்த விபத்தில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய சக மீனவர்கள் கடலில் படகு மட்டும் தனியாக நிற்பதை பார்த்து அருகில் தேடி உள்ளனர். அப்போது உயிரிழந்த நிலையில் செல்வமணி கடலில் மிதந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.. மீன் பிடிக்க சென்ற மீனவர் உயிரிழந்ததை கண்டு, அவரது உறவினர்கள் கதறி அழுதனர். கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Savitha