பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு! 

0
134
#image_title

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு! 

நாடாளுமன்ற தேர்தல்யொட்டி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ,ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு தானாக செல்கிறது என அதிமுகமுன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான மோகன் சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு.

தமிழகத்தில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்களும் கூட்டணி குறித்து மற்றும் பல்வேறு கருத்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் திருமண மண்டபத்தில் சின்னசேலம் கிழக்கு,வடக்கு ஒன்றியம் மற்றும் நகர சார்பில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் ஒன்றிய நகர செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் குமரகுரு கள்ளக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார்.தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான மோகன் பேசுகையில் சிறுபான்மை, ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு தானாக செல்கிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால் நம் ஓட்டு இழந்திருக்கிறோம். அந்த வீழ்ச்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது இருக்கும் அதிமுக தெளிவோடு இருக்கிறது. இரட்டை இலை ஒரு சிலரால் பதுங்கி கொண்டு இருக்கும் சூழல் இருந்தது. தற்போது இரட்டை இலை கிடைத்துவிட்டது என பாஜக அதிமுக கூட்டணியில் தேர்தல் தோல்வி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Savitha