திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!

திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!

திமுக 10 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அந்த வகையில் மக்கள் நலன் கருதி பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. மக்கள் திமுக ஆட்சி வந்த பிறகு நல்லாட்சி நடக்கிறது என்றும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகையில் மறுபக்கம் வெறும் மேற் போக்கிற்கு மட்டும் சில திட்டங்களை அமல்படுத்தியுள்ளனர் என்றும் விமர்சனம் செய்கின்றனர்.திமுக இதுவரை 202 திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது. இந்த 202 திட்டங்கள் எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றும் இந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்து உள்ளதா என்பதும் கேள்வி குறியே.

இருப்பினும் அவ்வப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அவருக்கு கீழ் உள்ள துறைகள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் கட்டணமில்லா பேருந்து திட்டத்தைப் பற்றி கேட்டறிந்தார். அதேபோல இன்று கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகே படைப்பாக்கத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

அவ்வழியே சென்ற முதல்வர் திடீரென்று அந்த பள்ளிக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள பள்ளி மாணவர்களிடம் அவர்களது குறையை கூறும்படி கேட்டார். பின்னர் மாணவர்களும் பள்ளியில் உள்ள குறைகளை முதல்வரிடம் கூறினர். மேலும் பள்ளி நிர்வாகம்  கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கிறது என்பதை பார்வையிட்டார். அதுமட்டுமின்றி அவர் சென்றது மதிய நேரம் என்பதால் அங்கு மாணவர்களுக்கு சமைத்த மதிய உணவையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திடீரென்று முதல்வர் பள்ளிக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டதால் தலைமையாசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் , மாணவர்களிடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது.