ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!! 

0
188
the-real-face-of-mari-selvaraj-who-makes-films-for-oppressed-people-udhayanidhi-who-shined-in-front-of-the-media
the-real-face-of-mari-selvaraj-who-makes-films-for-oppressed-people-udhayanidhi-who-shined-in-front-of-the-media

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக படம் எடுக்கும் மாரி செல்வராஜின் உண்மை முகம்!! மீடியா முன்னிலையில்  பளிச்சென்று போட்டுடைத்த உதயநிதி!!

மாரி செல்வராஜ் தற்போது வரை இரண்டு படங்களை எடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை மேல் சாதியினர் இழிவாக நடத்துவதை படமாக சித்தரித்து காட்டியுள்ளார். இந்த படங்கள் வெற்றிவாகை சூடினாலும்,  இவர் எடுக்கும் படங்கள் நேரடியாகவே மேல் சாதியினரை கடுமையாக தாக்குவது போல் உள்ளது. அந்த வரிசையில் பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து கர்ணன் படம் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உதயநிதி கடைசியாக நடிக்கும் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் காட்சிகள் பலவும் சேலம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்றார். கமல்ஹாசன் அவர்கள் எடுத்த தேவர்மகன் படத்தின் எசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் படத்தின் கதைகளம் உருவாக காரணம் என்று மாறி செல்வராஜ் கூறினார்.

அதன் காரணமாக தான் வடிவேல் அவர்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளார். மேற்கொண்டு தேவர் மகன் படத்தை குறித்தும் மாரி செல்வராஜ் சற்று விமர்சித்து கூறியதால் அவருக்கு எதிராக பல எதிர்ப்புகளும் கிளம்பியது. சாதி என்பதே இல்லை என்ற கருத்தை மையமாக வைத்து மாரி செல்வராஜ் ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி வரும் பட்சத்தில் இந்த இசை வெளியீட்டு விழாவில் சாதி பெருமை பற்றி பேசியுள்ளார்.படத்தின் ப்ரோமோஷன் காக இவ்வாறு அவர் தடம் மாறுவது சரியா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவருக்கு இணையாக உதயநிதியும்  மாரி செல்வராஜ் குறித்து யாரும் அறிந்திராத புதிய தகவலை அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைத்துள்ளார். எப்பொழுதும் மாறி செல்வராஜ் கோபமாக தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார் என்றும் இவருடைய கோபத்திற்கு அங்குள்ள அசிஸ்டன்கள்தான் தீனி என்ற பாணியில் கூறியுள்ளார். எப்பவும் அவரது அசிஸ்டன்ட் டைரக்டர்கள் அனைவரையும் அடிப்பதும் திட்டுவதும் என்ற வேலையாக தான்  இருப்பார்.

இவ்வாறு சூட்டிங் ஸ்பாட் ஆனது ஒரு போர்க்களமாக தான் இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார். உதயநிதி  கூறியதற்கு ஏற்றார் போல் வடிவேலும் ஆமாம் என ஒப்புக்கொண்டார். மாரி செல்வராஜ் குறித்து உதயநிதி கூறிய இந்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.ஏனென்றால் ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் வகையில் இருப்பது போல் காட்டிக்கொண்டு தன்னுடன் இருப்பவர்களிடம் இப்படி ஒழுங்கற்ற முறையில் நடந்துகொள்வது சரியா என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இவரை காட்டிலும் பெரிய இயக்குனர்கள் அமைதியான முறையில் செல்லும் பட்சத்தில் இரண்டு படம் எடுத்தவருக்கு இப்படி ஒரு ஆட்டமா என்று நெட்டிசன்ஸ்  எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இவரது படங்களில் மட்டும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை கடுமையாக தாக்குவது மனித உரிமை மீறல் என கூறிவிட்டு இவரும் தற்பொழுது அதைத்தான் செய்து வருகிறார்.