தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம்!!

0
33

தாலியை கழற்ற சொல்லவில்லை …அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது-சுங்கத்துறை விளக்கம்

சென்னை, மலேசியாவில் இருந்து சென்னை விமானநிலையத்திற்கு வந்தபோது தாலியை கழற்ற சொல்லி சுங்கத்துறை அதிகாரிகள் வற்புறுத்தியதாக சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.இந்த பதிவு இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் சுங்கத்துறை ஆணையரகம் இது குறித்து கூறியதாவது,

சென்னை விமானநிலையத்திற்கு கடந்த வாரம் மலேசியாவை சேர்ந்த ஒரு தம்பதி ஆன்மீக சுற்றுலாவிற்காக வந்தனர்.அப்பொழுது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் தங்க நகைகளை அவர்கள் அணிந்திருந்ததை பார்த்து சுங்கத்துறை அதிகாரிகள் இது பற்றி விவரங்களை கேட்டனர். ஆனால் அவர்கள் இது குறித்து பதில் தர மறுத்ததால் நகைகளை கழட்டும் படி அதிகாரிகள் சொன்னார்கள்.

இந்நிலையில் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாலியை கழற்ற மாட்டேன் என்று சொன்னதால் அவரது கணவர் மட்டும் கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் கையில் அணிந்திருந்த காப்பை கழட்டி கொடுத்தார்.
மதிப்பிட்டபோது 35 சவரன் இருப்பது கண்டறியப்பட்டு சுங்கவரியாக 6.5 லட்சம் விதிக்கப்பட்டது.சுங்க வரியை கட்ட மறுத்ததால் அவர்களின் நகைகளை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பாக வைத்தனர்.மேலும் திரும்ப மலேசிய செல்லும் பொழுது நகைகளை வாங்கிக்கொள்ளும் படி ரசீது ஒன்றை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை-23 அன்று அப்பயணிகள் மலேசியா திரும்பி சென்றபோது அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஒப்படைக்கப்பட்டு அபராதம் மட்டும் வசூலிக்கப்பட்டது.இவ்வாறு தெரிவித்துள்ளது.