இது ஒன்று போதும்!! தொடை கருமை புண் சிவந்து போதல் அனைத்தும் சரியாகிவிடும்!!

0
38

இது ஒன்று போதும்!! தொடை கருமை புண் சிவந்து போதல் அனைத்தும் சரியாகிவிடும்!!

சில பேருக்கு இரண்டு தொடைகளும் உராய்ந்து அங்கு புண்கள் ஏற்படுவது, சிவந்து போவது, அந்த இடம் கருமையாக காணப்படுவது, மற்றும் வீக்கம் ஏற்படுவது ஆகிய பிரச்சினைகளால் சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனையானது பெண்களுக்கே மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதிகமான உடல் எடையின் காரணமாக அந்த இடத்தில் இருக்கக்கூடிய சதை அதிகமாக இருப்பதால் இரண்டு தொடைகளும் உராய்ந்து அப்பகுதி கருமையாக காணப்படும்.

சில பெண்கள் தினமும் தொடர்ந்து லெக்கின்ஸ் உபயோகப்படுத்துவதால் அந்த இடத்தில் காற்றோட்டம் இல்லாமல் புண்கள் அரிப்பு சிவந்து போதல் ஆகியவை ஏற்படும். எனவே தொடை பகுதியில் ஏற்படக்கூடிய கருமை புண்கள் அரிப்பு சிவந்து போதல் வீக்கம் முதலியவற்றை சரி செய்வதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு ரெமிடியை பார்ப்போம். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் தாராளமாக பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்
எலுமிச்சை சாறு
தேன்
கற்றாழை ஜெல்

செய்முறை:
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தி வரலாம்.

இதை இரவு தூங்குவதற்கு முன்பாக தொடை பகுதியில் இருக்கக்கூடிய கருமையான இடத்தில் அல்லது புண்கள் அரிப்பு சிவந்து இருக்கக்கூடிய இடத்தில் தேய்த்து 20 இருந்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும் பிறகு தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டும். இவ்வாறு இதைத்தொடர்ந்து ஒரு வாரத்திற்கு செய்துவர தொடை பகுதியில் இருக்கக்கூடிய கருமைகள் புண்கள் அரிப்பு சிவந்து போதல் வீக்கங்கள் என அனைத்தும் சரியாகும்.

முதல் மூன்று நாட்கள் உபயோகப்படுத்திய போது உங்களுக்கு நிச்சயமாக ஒரு வித்தியாசம் தெரியக்கூடும் எனவே தொடர்ந்து ஒரு வாரம் இதை செய்து வர அந்த பகுதியில் இருக்கக்கூடிய கருமைகள் விளக்கங்கள் புண்கள் அரிப்பு எரிச்சல் என அனைத்து விதமான பிரச்சனைகளும் சரியாகும். மேலும் இந்த ரெமிடியை ஒரு வாரம் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தி வரலாம். மேலும் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளோ ஏற்படாது.

இதில் பயன்படுத்தி இருக்கக்கூடிய தேங்காய் எண்ணெய் ஆனது அந்த இடத்தில் இருக்கக்கூடிய அரிப்பு எரிச்சலை முதலில் சரி செய்யும். மற்றும் இதில் சேர்க்கப்பட்டிருக்கக் கூடிய எலுமிச்சை சாரானது அந்த பகுதியில் இருக்கக்கூடிய புண்களை விரைவாக ஆற்றி ஒரு கிருமி நாசினியாக செயல்படும். இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உடல் எடையை குறைக்க முயலுங்கள் அல்லது லெக்கின்ஸ் போன்ற காற்றோட்டம் இல்லாத ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

author avatar
CineDesk