ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கும் – அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்!!

0
110
#image_title

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த ஆட்சி ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்று தான் நமது முதல்வர் ஒவ்வொரு நாளும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் புகழாரம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடை பெற்ற அரசு விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் 287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 287 பயனாளிகளுக்கு ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (15.04.2023) வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்து வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி நகராட்சி பகுதியில் மட்டுமே டிராக்டர் மற்றும் பேட்டரி இயந்திரங்கள் மூலம் தூய்மை பணி மேற்கொண்டதை மாற்றி இன்று கிராமப்புறங்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக டிராக்டர் மற்றும் பேட்டரி பொருத்திய இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு எங்கு, என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு அதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருபவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தினை முன்னேற்றுவதற்காக எறையூர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைத்து அங்கே பல்வேறு தனியார் தொழிற்சாலை அமைப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் வருகை தந்து அடிக்கல் நாட்டினார்கள்.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றவுடன் 10,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு எந்த மாவட்டத்திற்கு என்ன தேவை என்று தேவையறிந்து சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரையில் இரண்டு முறை ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை இரண்டு முறையும் நிராகரிக்கப்பட்டது.

மக்கள் நலனில் உறுதியாக இருந்த காரணத்தினால் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அமலுக்கு கொண்டு வரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதினால் இந்தியாவில் நம்பர் ஒன் முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளங்கி வருகிறார்கள் என பேசினார்.

இந்நிகழ்வில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

author avatar
Savitha