மக்களுக்காக இந்த ஆட்சி நடைபெறும்! முதலமைச்சர் அதிரடி பதில்!

0
101

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூரில் இருக்கின்ற நெகமத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் சென்னை உள்பட பெருநகரங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இன்னும் மூன்று தினங்களுக்குள் நோய்த்தொற்று ஊரடங்கு பலனையும் கொடுக்கும். நோய்தொற்று குறையத் தொடங்கும் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

முதலில் சென்னை மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகரித்து வரும் நோய் தொற்று பரவலைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மே மாதம் 24ஆம் தேதி முதல் மே மாதம் 31-ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமல் படுத்தி இருக்கின்றோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதம் செய்யும் போது முதலில் ஒரு வாரம் முழு உள்ளங்கையை செயல்படுத்தி தொற்று பரவலின் தன்மையை கண்டு கொண்டு அதற்கேற்றவாறு ஊரடங்கை நீட்டித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவலை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் அதோடு அரசியல் நோக்கத்துடன் நாங்கள் எதையுமே அணுகவில்லை. மக்களுக்காக இந்த ஆட்சி நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.